PUBLISHED ON : ஜன 03, 2016

திருநெல்வேலி, சமூகரங்கபுரம் கிராமத்தை சேர்ந்த, எஸ்.டி.ரெட்டியார், 1855ல் வறுமையின் காரணமாக, பிழைப்பு தேடி, கேரளா சென்றார்.
கொல்லம் என்ற ஊரில், சிறிய அச்சகம் ஒன்றை துவங்கி, பஞ்சாங்கம் அச்சிட்டு, விற்கத் துவங்கினார். அப்போது, மத தலைவரான நாராயண குருவின் நட்பு, அவருக்கு கிடைத்தது.
'மக்களுக்கு பயன்படக் கூடிய நல்ல புத்தகங்களை அச்சிடவும்...' என, அவர் கூறியதை அடுத்து, முழுநேர பத்திரிகையாளர் ஆனார் ரெட்டியார்.
இன்று அவர் மறைந்து விட்டாலும், அவருடைய குடும்பத்தினர், ஐந்துக்கும் மேற்பட்ட வார, மாத இதழ்களை வெளியிட்டு வருகின்றனர். இதில், 'ஹாஸ்ய கைரளி' என்ற மாத இதழ், முழுக்க முழுக்க கார்ட்டூன்கள் மட்டுமே வெளிவரும் பத்திரிகை!
தமிழர் ஒருவர், மலையாள பத்திரிகை துறைக்கு செய்துள்ள அரிய சேவை, தமிழருக்கு பெருமை சேர்த்துள்ளது என்றால் அது மிகையில்லை.
— ஜோல்னாபையன்.
