PUBLISHED ON : ஆக 19, 2012

மனிதர்களுக்கு பணம், பொருள் இவற்றை சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால், அதை நேர்மையான வழியில் சம்பாதித்தால்தான், அது நேர்மையான வழியில் செலவாகும்; தவறான வழியில் சம்பாதித்த பணம், தவறான வழியில் செலவாகி விடும். ஒரு திருடன், ஒரு பொருளைத் திருடி, தன் மகனிடம் கொடுத்து, அதை விற்று வரச் சொன்னான். பையன் அதை எடுத்து, கடைத் தெருவுக்குப் போனான். கூட்டத்தில், பையனிடமிருந்த பொருளை, யாரோ திருடி விட்டனர். வெறுங்கையுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தான் பையன்.
அவனை எதிர்பார்த்துக் கொண்டிருந்த தகப்பனார், பையனை கூப்பிட்டு, 'ஏண்டா... கடைத்தெருவுக்குப் போய், நான் கொடுத்த பொருளை விற்றுவிட்டு வந்தாயா... என்ன விலைக்கு விற்றாய்?' என்று கேட்டான். அதற்கு பையன், 'வாங்கின விலைக்கு விற்றேன்...' என்றான். கஷ்டப்பட்டு சம்பாதித்த பொருள் தான் தங்கும்; இல்லையேல் வந்த வழியே போய் விடும்!
திருவானைக்கா என்ற ஷேத்திரம், திருச்சிக்கு அருகில் உள்ளது. அந்தக் காலத்தில் ஒரு ராஜாவால் கட்டப்பட்டது. இதற்கு மதில் சுவர் கட்டினான் ராஜா. நிறைய பேர் அந்த வேலையில் ஈடுபட்டனர். அவர்களுக்கு கூலி கொடுத்தான் ராஜா; எப்படி என்றால், பொன் தூளையும், மணலையும் கலந்து கொண்டான்.
அன்றாடம் வேலை முடிந்து வரும் கூலியாட்களுக்கு, பொன்னும், மணலும் கலந்து வைத்திருப் பதிலிருந்து ஒரு பிடி எடுத்துக் கொடுப்பான். அவர்கள் அதை எடுத்துப் போய், பொன்னையும், மணலையும் தனித்தனியாக பிரித்துப் பார்த்ததும், அவரவர் செய்த வேலைக்கு தகுந்தபடி பொன் இருக்கும். கஷ்டப்பட்டு வேலை செய்தவர் களுக்கு, பொன் நிறைய கிடைக்கும். மரத்தின் மறைவில் உட்கார்ந்து, ஓ#வு எடுத்தவர் களுக்கு பொன் துளியூண்டு இருக்கும். நாம் செய்த வேலைக்கு கூலி இவ்வளவுதான் என்று நினைத்துக் கொள்வர். அதனால், நேர்மையாக சம்பாதித்தால் நல்லது.
அந்தப் பணம், நல்ல காரியங்களுக்கு செலவிடப்பட்டு, புண்ணியம் கிடைக்கும். நேர்மையாக சம்பாதிக்கப்படாத பணம், நேர்மையற்ற வழியில் செலவாகி விடும்; இது நியதி. அநியாயமாக சம்பாதிக்கவும் வேண்டாம்; அந்தப் பணம் அநியாயத்துக்கு செலவாகவும் வேண்டாம். இப்படி இருக்க முடியுமா பாருங்கள்!
***ஆன்மிக வினா-விடை!
பெண்கள் சவுந்தர்ய லகரி தோத்திரம் சொல்லாமா?
சவுந்தர்ய லகரி தோத்திரத்தை ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் சொல்லலாம்.
***
வைரம் ராஜகோபால்
