sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

பக்தி மட்டும் இருந்தால் போதுமா?

/

பக்தி மட்டும் இருந்தால் போதுமா?

பக்தி மட்டும் இருந்தால் போதுமா?

பக்தி மட்டும் இருந்தால் போதுமா?


PUBLISHED ON : செப் 11, 2011

Google News

PUBLISHED ON : செப் 11, 2011


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பகவானிடம் பக்தி வைப்பது உயர்வான குணம்தான்; ஆனாலும், தன்னுடைய கர்மாக்களை (கடமைகளை) சரி வர செய்யாமல், பக்தி செய்தால் மட்டும் போதாது. கர்மாக்களால் உலகத்தை கட்டி நடத்துபவன் சர்வேஸ்வரன்; கர்மாக்களும், தர்மங்களும் அவனால் ஏற்படுத்தப்பட்ட ஆணை. அதை நிறைவேற்றாதவர்களுக்கு, அவன் தண்டனை அளிக்கிறான்.

ஒரு அரசன், அவன் மனைவி இருவரும் குருவிடம் உபதேசம் பெற்றனர். உபதேசம் பெறுவதற்கு முன் வரை, தினமும் ஏழை, எளியவர்களுக்கு உணவளித்து, அவர்களை திருப்தி செய்து வந்தான் அந்த அரசன். நிறைய தான, தர்மங்களும் செய்து வந்தான். உபதேசம் பெற்ற போது, 'பக்தி தான் முக்கியம்...' என்று உபதேசித்தார் அந்த குரு. இதைக் கேட்ட அரசன், தான, தர்மம் செய்வதையே விட்டு விட்டான்.

பசி, தாகம் என்று வருபவர்களுக்கு எதுவும் கொடுப்பதில்லை. 'ஹரி, ஹரி' என்று பக்தி செய்து கொண்டிருந்தான். அரசனும், அரசியும் அந்திம காலம் வந்து இறந்தனர்; ஆனால், இவர்களது ஆவி, பசி தாகத்தால் வருந்தியது; ஏழைகளின் பசி தாகம் இவர்களை துரத்தியது.

அப்போது எதிர்பட்ட வாமதேவர் என்ற முனிவரைக் கண்டு வணங்கி, இதன் காரணம் என்னவென்று கேட்டனர். முனிவரும், 'நீங்கள் பசியுடன் வந்தவர்களுக்கு உதவாமல், உங்கள் பசியைப் போக்கி உண்டு களித்தீர்கள். ஹரி பக்தி செய்தால் மட்டும் போதாது; ஹரி எல்லா உயிர்களிலும் இருக்கிறார்.

'மற்ற உயிர்களிலுள்ள ஹரியை நீங்கள் நினைக்காமல் பக்தி செய்தீர்கள். துயரப்பட்டவர்களுக்கு உதவாமல், இன்ப வாழ்க்கை அனுபவித்தீர்கள். ஹரி பக்தி என்பது, உங்கள் சுயநலத்துக்காக செய்யப்பட்டதாகிறது. அதனால், பசி, தாகம் என்பவை உங்களைத் தொடர்ந்து வந்து துன்பப்படுத்துகிறது...' என்றார்.

பசி தாகத்தால் துன்பப்பட்ட அரசன், அரசி ஆகியோரது ஆவிகள், தங்களது சரீரங்கள் ஆற்றில் மிதந்து வருவதை கண்டு, அதையே புசித்துக் கொண்டிருந்தன. பசித்தவனுக்கு அன்னம் இடாமல் தானே உண்பவன், தன் சடலத்தையே தின்றவனாவான் என்பது நீதி.

இறந்து போன அரச தம்பதிகளுக்கு பக்கத்தில் பசி, தாகம் என்ற பிசாசுகள் விகாரமான உருவத்துடன் நின்று, இவர்களை பரிகாசம் செய்து கொண்டிருந்தன. இவர்களுக்கு பக்கத்தில் இரண்டு அழகிய மங்கையர் நின்று, கொண்டிருந்தனர்.

அவர்கள் இருவரும் பிரக்ஞை என்ற நல்லறிவும், சிரத்தை என்ற நற்கருமத்தில் தளராத உறுதியும் உடையவர்கள். தான, தர்மம் என்ற கர்மாக்களை விட்டு விட்டு, வெறும் ஹரி பக்தி மட்டும் செய்து துன்பப்படும் அரச தம்பதிகளை கண்டு, அவர்கள் சிரித்துக் கொண்டிருந்தனர்.

இந்த விவரங்களை அறிந்த விஜ்ஜலன் என்ற கிளி பறந்தோடி சென்று, தன் பிதாவிடம் விவரம் சொல்ல, பிதாவும், வாசுதேவ ஸ்தோத்திரம் சொல்லிக் கொடுத்தது. விஜ்ஜலன் ஓடி வந்து, இந்த ஸ்தோத்திரத்தை சவம் தின்னும் அரச தம்பதிகளுக்கு சொல்ல, அவர்களும் இந்த ஸ்தோத்திரத்தை சொல்லி, பகவானை வேண்டினர்.

பகவான் எதிரில் தோன்றி சவம் தின்னும் பேய்களையும், அருகில் நின்ற பசி, தாகம் என்ற பிசாசுகளையும் நீக்கி, திவ்ய ஞானத்தை அவர்கள் அடையும்படி செய்தார். திவ்ய ஞானம் பெற்றவர்கள், திவ்ய விமானத்திலேறி வைகுண்டம் சென்றனர்.

இதிலிருந்து பக்தி மட்டும் இருந்தால் போதாது; தான, தர்மங்களையும், தன் கடமைகளையும் ஒழுங்காக செய்ய வேண்டும் என்று தெரிகிறதல்லவா?

***

ஆன்மிக வினா-விடை!

ஸ்ரீராமஜெயம், முருகன் துணை, ஓம் நமச்சிவாய என்றெல்லாம் எழுதுகின்றனரே... அதனால் என்ன பலன்?

பகவான் நாமாக்களை, 108 அல்லது 1008 முறை எழுதுவதால், மன அமைதி கிடைக்கும்.

***

வைரம் ராஜகோபால்






      Dinamalar
      Follow us