
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதுவாக, மனிதர்களின் கண் இமைகளில் உள்ள முடியின் நீளம், 0.8 - 1.2 செ.மீ., தான் இருக்கும்; ஆனால், சீனாவைச் சேர்ந்த, ஜியான் ஜியா என்ற பெண்ணின் இமை முடியோ, 12.4 செ.மீ., நீளம் உள்ளது.
இதற்கென, பிரத்யேகமாக, எண்ணெய் தடவி, முடியை பராமரித்து வருகிறார், இந்த பெண். உலகிலேயே, மிக நீளமான, கண் இமை முடிகளை உடையவர் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில், இவரது பெயர் இடம் பெற்றுள்ளது.
— ஜோல்னாபையன்

