PUBLISHED ON : செப் 12, 2021

உடல் பருமன், சர்வதேச பிரச்னையாக உருவெடுத்துள்ளது. உடற்பயிற்சி செய்வது, சாப்பிடாமல் இருப்பது போன்ற பல்வேறு வழிகளில் உடல் எடையை குறைக்க, பலரும் முயற்சித்து வருகின்றனர்.
நியூசிலாந்தில் உள்ள ஒடாகோ பல்கலை ஆராய்ச்சி மாணவர்கள், பூட்டு போன்ற சிறிய கருவியை கண்டுபிடித்துள்ளனர். இந்த பூட்டை வைத்து, மேல் - கீழ் பற்களையும், சாவி போட்டு பூட்ட முடியும்.
இந்த பூட்டை போட்டால், அதன் பின் வாயை, 2 மி.மீ., மட்டுமே திறக்க முடியும்; திரவ உணவை மட்டுமே சாப்பிட முடியும்.
சாதம், பீட்சா, பர்கர், சப்பாத்தி, ரொட்டி என, எதையும் சாப்பிட முடியாது. அவ்வளவு ஏன்; சாக்லேட் கூட சாப்பிட முடியாது. பற்களால் எதையும் அசைபோட முடியாது.
இந்த பூட்டுக்கு நியூசிலாந்தில் கிராக்கி ஏற்பட்டாலும், 'இது அபாயகரமான விஷப்பரீட்சை...' என, பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
— ஜோல்னாபையன்.
