PUBLISHED ON : ஜன 10, 2016

அ நிறம் | அளவு
ரஷ்யாவைச் சேர்ந்த எலியா புளோச்சா என்பவர், பெண்களுக்கான அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவர், 'மேக் - அப்' என்ற பெயரில், தொட்டிகளில் அழகுக்காக வளர்க்கப்படும், வண்ண மீன்களை கொன்று, அவற்றை, தன் முகத்தில் ஆங்காங்கே ஒட்டி, புகைப்படம் எடுத்து, 'இந்த, 'மேக் - அப்'பில், எப்படி இருக்கிறேன்...' என, சமூக வலைத் தளங்களில் வெளியிட்டார்.
'அழகுப்படுத்திக் கொள்வதாக கூறி, இதுபோல் காட்டுமிராண்டித்தனமாக செயல்படுவதை எலியா, உடனடியாக நிறுத்த வேண்டும்...' என, உலகம் முழுவதும் கடும் கண்டன குரல் எழும்ப, அரண்டு போன எலியா, 'அத்துமீறி விட்டோமோ...' என, புலம்பி வருகிறார்.
— ஜோல்னாபையன்.
