ஆறு கோடி ரூபாய்க்கு ஏலம் போன ஜேம்ஸ்பாண்ட்டின் நீர்மூழ்கி கார்!
ஆறு கோடி ரூபாய்க்கு ஏலம் போன ஜேம்ஸ்பாண்ட்டின் நீர்மூழ்கி கார்!
PUBLISHED ON : அக் 20, 2013

ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வெளிவரத் துவங்கி, 50 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டன. இதுவரை, 23 படங்கள் வெளிவந்திருந்தாலும், மக்களுக்கு, ஜேம்ஸ்பாண்ட் மீதான மோகம், சற்றும் குறையவில்லை.
ஜேம்ஸ்பாண்டாக நடிக்கும் நடிகர்கள், படங்களில் பயன்படுத்தும் பொருட்கள், ரசிகர்களிடையே, பெரும் வரவேற்பை பெற்றவை. விதவிதமான துப்பாக்கிகள், கார்கள், ஹெலிகாப்டர்கள் என, ஜேம்ஸ் பாண்ட் படங்களில் பயன்படுத்தப்படும்.
இதில், 1977ல், ரோஜர் மூர், ஜேம்ஸ்பாண்டாக நடித்து வெளியான, 'தி ஸ்பை ஹு லவ் டு மி' என்ற படத்தில் பயன்படுத்திய, நீர்மூழ்கி காரும் ஒன்று. வில்லன்களின் தாக்குதலில் இருந்து தப்பிப் பதற்காக, ரோஜர்மூரும், ஹீரோயின் பர்பரா பக்கும், வெள்ளை நிற நீர்மூழ்கி காரில் ஏறி, கடலுக்குள் சென்று, தப்பிப்பர்.
அந்த கால ரசிகர்களிடையே, இது, பெரும் வரவேற்பை பெற்றது. படம் வெளியான பின், லண்டனை சேர்ந்த ஒரு ஏல நிறுவனம், அந்தக் காரை வாங்கியது. இத்தனை ஆண்டு இடைவெளிக்கு பின், இந்த காரை, சமீபத்தில் அந்த நிறுவனம், ஏலம் விட்டது. ஜேம்ஸ்பாண்ட் ரசிகர் ஒருவர், அந்த காரை,
6 கோடி ரூபாயக்கு ஏலம் எடுத்துள்ளார்.
— ஜோல்னா பையன்.
