தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஜப்பான் பெண்ணின் பொம்மை பைத்தியம்!

ஜப்பான் பெண்ணின் பொம்மை பைத்தியம்!

ஜப்பான் பெண்ணின் பொம்மை பைத்தியம்!


PUBLISHED ON : டிச 16, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 16, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஹெல்லோ கிட்டி' என்ற, கற்பனை பெண் பூனை கதாபாத்திரம், உலகம் முழுவதும் உள்ள, குழந்தைகளிடையே, மிகவும் பிரசித்தம். இந்த கற்பனை கதாபாத்திரம், கார்ட்டூன்களிலும், 'டிவி' சீரியல்களிலும், ஒளிபரப்பாகி வருகிறது.

குழந்தைகளுக்கான பொம்மை கடைகளிலும், இந்த 'ஹெல்லோ கிட்டி' பொம்மை விற்பனை சக்கை போடு போடுகிறது. குழந்தைகளுக்கு வேண்டுமானால், இந்த பொம்மைகள் மீது, ஆர்வம் இருக்கலாம். ஆனால், ஜப்பானை சேர்ந்த, ஆகோ கண்டா என்ற, 39 வயது பெண், 'ஹெல்லோ கிட்டி' மீது, பைத்தியமாகவே ஆகி விட்டார்.

இந்த பொம்மைகள், கண்ணில் எங்கு தென்பட்டாலும், உடனடியாக அதை விலைக்கு வாங்கி, தன் வீட்டில் வைத்து விடுவார். இதுவரை, 4,519 பொம்மைகளை வாங்கி, தன் வீட்டில், அடுக்கி வைத்துள்ளார். இதன் மூலம், கின்னஸ் சாதனை புத்தகத்திலும், இவரது பெயர் இடம் பெற்று விட்டது.

ஓய்வு நேரம் கிடைக்கும்போதெல்லாம், இந்த பொம்மைகளுடன், கொஞ்சி விளையாடுவது தான், இந்த பெண்ணின் பொழுதுபோக்கு. 'என்னுடைய இந்த விசித்திரமான பழக்கத்தால், என் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவது உண்மை தான். ஆனால், சிறு வயதில் துவங்கிய ஆசையை, என்னால் விட முடியவில்லை....' என்கிறார், ஆகோ கண்டா.

— ஜோல்னா பையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us