தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மீண்டும் நடிக்க விரும்பும் ஜெமீலா!

மீண்டும் நடிக்க விரும்பும் ஜெமீலா!

மீண்டும் நடிக்க விரும்பும் ஜெமீலா!


PUBLISHED ON : ஜன 22, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 22, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முஸ்லிம் பெண்கள் வெளியே நடமாட தயங்கிய காலத்திலேயே, புனே பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து, நடிப்பில் பட்டம் பெற்றவர், கேரளாவைச் சேர்ந்த ஜெமீலா மாலிக். சில மலையாளப்படங்கள் உட்பட, பல்வேறு மொழிகளில், 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், தற்போது, வாடகை வீட்டில், நோயாளி மகனுடன் ஏழ்மையில் வாடுகிறார்.

இதுபற்றி, ஜெமீலா கூறும் போது, 'புனே இன்ஸ்டிடியூட்டில் படிக்கும் போது, என் வகுப்புத் தோழி, ஜெயா பாதுரி; அவரை காண அடிக்கடி அமிதாப் வருவார். அப்போது, இருவருடனும் நெருங்கி பழகியுள்ளேன். இன்று கஷ்டப்படும் நிலையில், அவர்களுடனான என் நட்பை புதுப்பிக்க விரும்பவில்லை...' என்று கூறியவர், 'கடந்த, 30 ஆண்டுகளாக நடிப்பு பக்கமே போகவில்லை. கணவரை பிரிந்த நிலையில் தற்போது, சீரியல்களில் நடிக்கிறேன்; வாய்ப்பளித்தால், சினிமாவிலும் நடிக்கத் தயார்...' என்கிறார்.

இவர், ஜெயலலிதா நடித்த கடைசிப் படமான, நதியைத் தேடி வந்த கடல் படத்தில் ஜெயிலராக நடித்துள்ளார்.

-- ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us