/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நெல்சன் மண்டேலாவுடன் இணைந்த, பில்லி நாயர்!
/
நெல்சன் மண்டேலாவுடன் இணைந்த, பில்லி நாயர்!
PUBLISHED ON : மே 24, 2020

ஆப்ரிக்காவின் ரோபன் தீவு சிறையில், 27 ஆண்டுகள் இருந்தார், ஆப்ரிக்க தலைவர், நெல்சன் மண்டேலா. அப்போது, அவருடன் சிறையில் பில்லி நாயர் என்ற மலையாளி இருந்தார்.
கேரள மாநிலம், பாலக்காட்டை பூர்வீகமாக கொண்ட, கிருஷ்ணன் நாயர் என்பவர், பஞ்சத்திலிருந்து தப்பிக்க மும்பை வழியாக, ஆப்ரிக்கா போனார். இவருடைய மகன் தான், பில்லி நாயர்.
டர்பன் நகரில் பிறந்து, அங்கேயே படித்து, தொழிற்சங்க தலைவரான, பில்லி நாயர், மண்டேலாவின் கட்சியான, 'ஆப்ரிக்கன் நேஷனல் காங்கிரஸ்' கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார்.
சிறையிலிருந்து விடுதலை ஆகி, பிறகு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு, அதிபர் ஆனார், மண்டேலா. அப்போது, எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார், பில்லி. மண்டேலா பலமுறை வற்புறுத்தியும், அமைச்சராக மறுத்து விட்டார், பில்லி நாயர். இறுதி வரை தொழிற்சங்கத்திலேயே இருந்து, அக்., 23, 2008ல் இறந்து விட்டார்.
— ஜோல்னாபையன்

