தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஜோல்னா பையன்!

ஜோல்னா பையன்!

ஜோல்னா பையன்!


PUBLISHED ON : ஜூன் 20, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 20, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடல் முழுவதும் செதில்கள் போல் தோல் கரடு முரடாக வளர்ந்தால் எப்படி இருக்கும்? மனித பவள பாறை போல இருக்கும். இப்படி கோரமாக காட்சியளித்த ஒருவர், சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளார்.

சீன நாட்டின் தென் பகுதியில் உள்ள ஷூய்மென் என்ற ஊரில் வசிப்பவர் லின் டியான் சுவான்; வயது 38. இவரைப் பார்த்தாலே எல்லாரும் பயந்து ஓடுவர். காரணம், இவர் உடல் முழுவதும் பட்டை, பட்டையாக மருக்கள் பெரிதாக வளர்ந்துள்ளதுதான். இவரால் கை, கால்களை தூக்க கூட முடியாது. 13வது வயதில் இருந்தே இவர் கை, கால்களில் இந்த மருக்கள் பெரிதாக வளரத் தொடங்கி விட்டன. நண்பர்கள், உறவினர்கள் எல்லாரும் இவரை வெறுத்து ஒதுக்கி விட்டனர். இவரது நிலையை கேள்விப்பட்ட புசோ தோல் நோய் மருத்துவமனை டாக்டர் லி யிங்காங் என்பவர், இவருக்கு சிகிச்சை அளிக்க முன் வந்தார். உடலில் வளர்ந்த மருக்களை எல்லாம், அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் வெட்டி எடுத்தனர். தொடர்ந்து அந்த இடங்களில், கதிரியக்க சிகிச்சையும் அளித்தனர். இப்போது இவரது உடலில் சில தழும்புகள் மட்டுமே உள்ளன. அவையும் விரைவில் மறைந்து விடும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

— ஜோல்னா பையன்.

***



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us