தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/5000 அடி உயரத்தில் இருந்து குதித்து சாதனை வீரர் மரணம்!

5000 அடி உயரத்தில் இருந்து குதித்து சாதனை வீரர் மரணம்!

5000 அடி உயரத்தில் இருந்து குதித்து சாதனை வீரர் மரணம்!


PUBLISHED ON : மார் 27, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 27, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'கரணம் தப்பினால் மரணம்' என, சர்க்கசில் சாதனை செய்யும் வீரர்களை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்போம். இதே போல் சாகசம் செய்த வீரர் ஒருவர், ஐந்தாயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்த போது, மரணமடைந்துள்ளார்.

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த இந்த வீரரின் பெயர் கேரி ஹார்பர்ட். மிக உயரமான மலைகள், கட்டடங்கள், வானில் பறக்கும் விமானங்களில் இருந்து, பாராசூட் மூலம் குதித்து சாதனை செய்வதுதான் இவரது பொழுதுபோக்கு. உலகம் முழுவதும் பல நாடுகளில் இவர் இதுவரை, 450 முறை உயரமான மலையில் இருந்து குதித்து சாதனை நிகழ்த்தியுள்ளார். விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து, ஆறாயிரம் முறை பத்திரமாக தரையிறங்கியுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறையை லண்டனில் குடும்பத்துடன் கொண்டாடினார். பின்னர், மலை மேல் இருந்து குதித்து சாதனை நிகழ்த்துவதற்காக சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சென்றார்.

ஆல்ப்ஸ் மலையில், 'ஹை அல்டிமேட்' என்ற ஐந்தாயிரம் அடி உயரமான செங்குத்தான மலையை, தன் சாதனைக்கு தேர்வு செய்தார். அவருடன், அமெரிக்காவைச் சேர்ந்த நண்பர் கிறிஸ் பீட்டர்சன் என்பவரும் சென்றார்.

வழக்கமாக, இது போன்று உயரமான இடங்களில் இருந்து குதிக்கும் போது, இவர் சிறிது நேரம் வானில் பறந்த படி கீழே இறங்குவார். அதன் பின்னர், தான் பாராசூட்டை விரிப்பார். பின்னர் குறிப்பிட்ட இடத்தில் பத்திரமாக தரையிறங்குவார். அந்த துரதிருஷ்டமான நாள் அன்றும், கேரி, உயரமான மலை மீது ஏறினார். குதிப்பதற்கு தயாராக பாராசூட் மற்றும் உடைகளை எல்லாம் அணிந்தார்.

நண்பர்கள், சுற்றுலா பயணிகள் என பலர் வேடிக்கை பார்க்க சுற்றி நின்றனர்.

மலை உச்சியில் இருந்து திடீரென கீழே குதித்தார். ஆனால், அப்போது என்ன நடந்ததோ தெரியவில்லை. அவர் குதித்த முறை தவறானது. அவர் சுதாரிப்பதற்குள் அவர் தலைகீழாக விழுந்தார். உயரமான பாறை ஒன்றில் அவர் தலை பயங்கரமாக மோதியது. அந்த வேகத்தில் அவர் உடலில் இருந்து பாராசூட் விரிந்தது. ஆனால், மோதிய வேகத்திலேயே அவர் மரணமடைந்தார். அவர் உடல் பாராசூட்டுடன் ஒரு மரத்தில் சிக்கி நின்றது. பிறகு, ஹெலிகாப்டர் மூலம் அவர் உடல் மீட்கப்பட்டது.

சுவிஸ் மலைப்பகுதிகளில் இதுபோன்ற சாகச நிகழ்ச்சிகள் சர்வ சாதாரணமாக நடக்கும். கடந்த ஆண்டு மட்டும், 10 ஆயிரம் முறை இது போன்ற சாகச நிகழ்ச்சிகள் நடந்துள்ளன; மூன்று பேர் மட்டுமே மரணமடைந்தனர்.

சுவிஸ் நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட இந்த விளையாட்டு, பிரபல சாதனை வீரரின் உயிரைக் குடித்ததுதான் ஆச்சரியமளிக்கிறது.

***

- சாம் ராபர்ட்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us