PUBLISHED ON : ஜூலை 25, 2010

அ நிறம் | அளவு
* சின்னஞ் சிறு
விஷயத்தையெல்லாம்
பெரிது படுத்துகிறாய்...
* தாலி கட்டி விட்டால்
அடிமையில்லை
என்கிறாய்...
* கூப்பாடு போட்டு
ஊரைக் கூட்டுகிறாய்...
சமத்துவம்... சம உரிமை
பெண்ணீயம் பேசுகிறாய்...
* பட்டம் வாங்கியவள்...
சட்டம் தெரியும்
என்கிறாய்...
* நினைத்தால்
குடும்பத்தார்
அனைவரையும்
கம்பி எண்ண
வைப்பேன் என்கிறாய்...
* பெருமையாகத் தான்
இருக்கிறது எனக்கு...
உனக்கு நான்
கொடுத்திருக்கும்
சுதந்திரம்!
-சொல்கேளான் ஏ.வி.கிரி, தாம்பரம்.
