தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை! - நிறைய பேர்...

கவிதைச்சோலை! - நிறைய பேர்...

கவிதைச்சோலை! - நிறைய பேர்...


PUBLISHED ON : நவ 22, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 22, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெட்டுக் கத்தியை விட

கத்திப் பேசி பிறரை

காயப்படுத்தியவர்கள்

நிறைய பேர்!

வெடிகுண்டை விட

வெகுண்டு எழுந்து

பிறரை மடியச் செய்தவர்கள்

நிறைய பேர்!

கல் எறிந்து

மாளிகையை உடைத்தவர்களை விட

சொல் எறிந்து

மனங்களை உடைத்தவர்கள்

நிறைய பேர்!

நம்பிக் கெட்டவர்களை விட

கெட்டுப் போய்

நம்பியவர்கள்

நிறைய பேர்!

தப்பான உறவுகளை விட

நட்பான உறவுகளில்

தடம் புரண்டவர்கள்

நிறைய பேர்!

சண்டை போட்டு

பேசாமல் இருப்பவர்களை விட

பேசினால் சண்டை வரும் - என

இருப்பவர்கள்

நிறைய பேர்!

பாகப் பிரிவினையால்

பிரிந்தவர்களை விட

மோகப் பிரிவினையால்

பிரிந்தவர்கள்

நிறைய பேர்!

விதி வந்து

விழுந்தவர்களை விட

மதியிழந்து

மரணித்தவர்கள்

நிறைய பேர்!



எல். ரவி, செ.புதுார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us