PUBLISHED ON : டிச 12, 2010

* செம்மொழித் தேரேறி
செந்தமிழ்த் தாய் - இதோ
பவனி வந்துவிட்டாள்
கோவை மாநகரில்!
* பெருமிதம் கொள்...
உலகப் பொதுமறை
திருக்குறள் தந்த
தெய்வப் புலவர்
திருவள்ளுவ மகானின்
தாய்மொழித் தமிழ்
செம்மொழியானது!
*நெஞ்சம் நிமிர்
நனவாகிறது
பாரதியின் கனவு...
காலம் கனிந்தது...
உலகத் தெருக்களில்
தேனாய்ப் பாயவிருக்கிறது
'தேமதுரத் தமிழோசை!'
* பரவசம் கொள்...
காட்சியளிக்கிறாள்
தமிழன்னை...
காலில், 'சிலம்பு'
இடையில், 'மேகலை'
மார்பில், 'சிந்தாமணி'
காதில், 'குண்டலகேசி'
கைக்கு, 'வளையாபதி'
முடியில், 'சூடாமணி' சூடி
கையில் செங்கோலாய்,
'திருக்குறள்' ஏந்திய
தமிழன்னையின் தரிசனம்...
பாவேந்தருக்கு மட்டுமல்ல — இனி...
பார் முழுக்கக் கிடைக்கும்!
* எங்கள் வாழ்வும்...
எங்கள் வளமும்...
வளைத்து விட...
வேண்டாத பொருளானோம்...
வீடு வரை உறவும்
இனி இல்லை...
முதியோர் இல்லமே
இனி எங்கள் கூடு!
* இங்கும்
எங்களைப் போலவே
தனித்து விடப்பட்ட
தாய்ப்பறவைகள்
ஏராளம் பேர்...
கடந்த கால நினைவுகளையும்
கானல் நீரான கனவுகளையும் கண்ணீருடன் அசை
போட்ட படி...
* இப்பொழுதும் கூட
பால்ய நினைவுகளின் சாரலில்
காகிதத்தில் கப்பல் செய்து
காத்திருக்கிறேன்!
* ஏனோ தெரியவில்லை
மழைதான் வரவே இல்லை...
என்ன காரணமோ...
மனித நேயம் மறந்த
மனிதர்களாலா?
நன்றி மறந்த
பிள்ளைகளாலா?
* தெரியவில்லை!
— க.விஜயபாஸ்கர், மூவானூர்.
