PUBLISHED ON : பிப் 27, 2011

* நான் முள்ளாய்
குத்தினாலும்
முகம் சுளிப்பதில்லை நீ...
* என் அழகுக்கு
தகுதியற்றவன் நீயென
மூக்கை உடைக்கிறேன்...
உண்மையென ஆமோதித்து
என் உச்சி முகர்கிறாய்!
* எனக்கொரு கஷ்டமெனில்
உனக்கு வந்ததாய்
உதடு துடிக்கிறாய்...
உனக்கொரு பிரச்னையெனில்
நடிக்கத்தான் முடிகிறது என்னால்!
* நான் ஆசைப்பட்டது நிலவென்றாலும்
அதை வாங்க
அவசரமாய் யோசிக்கிறாய்...
உன் மீது இடியே விழுந்தாலும்
பதறாமல் நிதானிக்கிறேன் நான்!
* உன் பிறந்த நாளே
என் பிறந்த நாளென்கிறாய்...
காதுக்குள் கவிதை சொல்லியே
கலங்கடிக்கிறாய்!
* உன்னைக் கைப்பிடித்த பிறகே
முற்றுபெற்றேனென்கிறாய்...
என்னைத் தொட்ட அன்று தான்
முழுமையடைந்ததாய் முனகுகிறாய்!
* காதல் நாரெடுத்து
காதில் பூவைத்து
என் தேகம் தீண்டி
விட்டுச் சென்ற அவனெங்கே?
* எல்லாம் தெரிந்திருந்தும்
உள்ளங்கை வெண்ணையாய்
என்னைத் தாங்கும் நீயெங்கே?
* இனியும்
உள்ளக் குறுகுறுப்போடு
மனசாட்சிக்கு துரோகமிழைத்து
என்னால் வாழ முடியாது...
* ஆதலால் தான் சொல்கிறேன்
என் அன்புக் கணவா...
* கொந்தளி...
கோபப்படு...
என்னைக் கொடுமைப்படுத்து...
உன்னை விட்டு விலகி
வெகுதூரம் செல்ல வேண்டும்!
— முத்து நாச்சியா, முத்துப்பேட்டை.
