தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை - அழுகை எதற்கு ?

கவிதைச்சோலை - அழுகை எதற்கு ?

கவிதைச்சோலை - அழுகை எதற்கு ?


PUBLISHED ON : அக் 31, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 31, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* அழுகை...

* அது...

சொந்தக் காலில்லாத

சோம்பேறி மனிதர்கள்

கண்களால் ஆடும்

கோலி விளையாட்டு!

* அழகான முகத்தை

அலங்கோலப்படுத்த

அவர்களாகவே

அவர்கள் மேல் எறியும்

ஆசிட் வீச்சு!

* சோகம் காட்டி

சுகம் பெறலாமென்ற

சூட்சுமக்காரர் எண்ணங்களின்

சுய விளம்பரம்!

* ஒவ்வொரு நிகழ்வுக்காகவும்

ஒப்பாரி வைக்கும்

உதவாக்கரை மனிதனே...

உன் நிலைக்காக

ஒருமுறையாவது

ஓலமிடுவாயா?

* ஏனென்றால்...

நீயே கூட ஒரு

நடை பிணம் தானே!

* பிணத்தின் மீது

விழுகிற துளிகளே...

ஒருவன் வாழ்ந்ததற்காக

கிடைக்கிற விருதுகள்!

* ஆகையால் தான்

மனிதனே...

அடுத்தவர் கண்கள்

அழுகிற நீரை

வாழ்கிற வரையில்

வழித்துத் துடைத்தெறி!

* கண்களிலிருந்து

கழன்று விழுகின்றனவே

அவைகள்

கண்ணீர்த் துளிகளா?

இல்லை —

* முறிந்து விழும்

முயற்சிகள்...

* கருகிச்சாயும்

கனவுகள்...

* வியர்வைத் துளிகளின்

விரோதிகள்!

* உழைத்து உழைத்து

வாழ்வில் உயர

இரு கை இருப்பதை

உணர்ந்துவிட்டால்

அழுகை ஏன்

அவசியப்படுகிறது நண்பனே?

— எல்.பிரைட், தேவகோட்டை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us