PUBLISHED ON : ஏப் 03, 2011

நம்ப முடியாதுதான்... ஆனால், முடியும் என நிரூபித்துள்ளனர் இரண்டு மாணவர்கள். வெறும், ஐந்தாயிரம் ரூபாய்க்கு, 'லேப்டாப்' எனப்படும் மடிக்கணினியை தயாரிக்க முடியுமாம்.
ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் நகரில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியைச் சேர்ந்த சந்திரசேகர் பாண்டா என்ற மாணவரும், சஸ்வத் ஸ்வைன் என்ற மாணவரும் கடந்த, 10 மாதங்களாக ஆராய்ச்சி செய்து, புதிய லேப்டாப் ஒன்றை உருவாக்கியுள்ளனர். மற்ற லேப்டாப்களில் உள்ள எல்லா அம்சங்களும், இந்த லேப்டாப்பிலும் இடம் பெற்றுள்ளது. 'டி.எஸ்.ஏ.16.,' என, இதற்கு பெயர் சூட்டியுள்ளனர். 'பெரிய அளவில் யாராவது முதலீடு செய்ய முன்வந்தால், இந்த லேப்டாப்களை அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்ய முடியும். அதன் மூலம், நாடு முழுவதும் எல்லா பள்ளி மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்க முடியும்...' என்கின்றனர் இந்த மாணவர்கள். இவர்கள் முயற்சி வெற்றி பெறுமா?
— ஜோல்னா பையன்.
