PUBLISHED ON : ஜூன் 10, 2012

இரண்டு கோடி ரூபாய்க்கு விற்பனை!
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த, 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் ஆடியோ ரைட்ஸ், 1.75 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால், இப்போது அதே கவுதம் மேனன் இயக்கியுள்ள, 'நீதானே என் பொன் வசந்தம்' படத்தின் ஆடியோ ரைட்ஸ், இரண்டு கோடி ரூபாய்க்கு பேசப்பட்டு வருகிறது. இப்படத்துக்கு இசை, இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது.
— சினிமா பொன்னையா.
ஆன்ட்ரியா வேண்டுகோள்!
'திருப்பங்கள்' படத்தில் ஆன்ட்ரியா நடித்த நல்ல காட்சிகள் எத்தனையோ இருக்க, அவர் கிளாமராக நடித்த, ஒரு காட்சியின் புகைப்படங்களை பப்ளிசிட்டி செய்து விட்டனர். இதனால், டென்ஷனான நடிகை, அப் படாதிபதியை சந்தித்து, 'கமலின், 'விஸ்வரூபம்' படத்தில் தற்போது நடித்துள்@ளன். இந்த நேரத்தில், இது மாதிரி போட்டோக்களை வெளியிட்டு, என் இமேஜை கெடுத்து விடாதீர்கள்...' என்று கேட்டுக் கொண்டுள்ளார். அன்று கண்டனர், இன்று வந்தனர்!
— எலீசா.
அம்மன் வேடத்தில் மீனா!
திருமணத்துக்கு முன், மீனா நடித்த தெலுங்கு படம், 'வாசவி வைபவம்!' இதில், மீனா, அம்மன் வேடத்தில் நடித்துள்ளார். பைனான்ஸ் பிரச்னையில், சில ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த அப்படம், இப்போது தான் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தெலுங்கு மட்டுமின்றி தமிழுக்கும், 'டப்' ஆவதால் உற்சாகத்தில் இருக்கிறார் மீனா. காலம் இல்லா காலத்தில் காய்த்ததாம் பேய் சுரைக்காய்!
—எலீசா.
ஆர்யா வியாபார திட்டம்!
தமிழில் நடித்துக்கொண்டே, 'உருமி' மலையாள படத்தில் நடித்த ஆர்யாவுக்கு, தெலுங்கிலும் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. செல்வராகவன், 'இரண்டாம் உலகம்' படத்தை தமிழ், தெலுங்கு என, இரு மொழிகளில் எடுத்து வருவதால் உற்சாகத்தில் இருக்கிறார். இந்த நிலையில், ஆர்யா - ஸ்ரேயா நடித்த, 'சிக்கு புக்கு' படமும் இப்போது, 'லவ் டு லவ்' என்ற பெயரில் தெலுங்குக்கு, 'டப்' ஆகிறது. இதனால், இந்த சூட்டோடு தெலுங்கிலும் தனக்கென, ஒரு வியாபார வட்டத்தை உருவாக்கிவிட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்.
— சி. பொ.,
இந்தியை தவிர்க்கும் சமந்தா!
'நீ தானே என் பொன் வசந்தம்' படத்தின் இந்தி பதிப்பிலும் நடித்துள்ள சமந்தாவுக்கு மேலும், சில இந்திப்பட வாய்ப்புகள் தேடி வந்தன. ஆனால், அவற்றில் நடிக்க மறுத்து விட்டார் அவர். கேட்டால், 'இப்போதைக்கு தமிழ், தெலுங்கில் நடித்து நிரந்தர இடம் பிடித்தாலே, போதுமென்று நினைக்கிறேன். அதிக ஆசைப்பட்டு, இருக்கிற இடத்தை இழந்து விடக்கூடாது என்பதே என் குறிக்கோள்...' என்கிறார் சமந்தா.
— எலீசா.
பட்டப்பெயரை தவிர்த்த விஷால்!
'அஜீத்தே, 'அல்டிமேட்' என்ற அடைமொழியை நீக்கிய பின், எனக்கு எதற்கு பட்டப்பெயர்...' என்று, தன் பெயருக்கு முன் போட்டிருந்த, 'புரட்சி தளபதி' என்ற பெயரை நீக்கி விட்டார் விஷால். விஷாலை பார்த்து, பரத்தும், 'சின்ன தளபதி' என்ற தன் பட்டப்பெயரை நீக்கி விட்டார்.
— சினிமா பொன்னையா.
அவ்ளோதான்!
