PUBLISHED ON : அக் 07, 2012

'ஏரோ 3 டி' தொழில் நுட்பத்தில் 'விஸ்வரூபம்!'
கமலின், 'விஸ்வரூபம்' படம், 'ஏரோ 3டி' என்ற தொழில் நுட்பத்தில் உருவாகி உள்ளது. ஆனால், இந்த தொழில் நுட்பம், இந்தியாவில் உள்ள எந்த தியேட்டரிலும் இல்லை. அதனால், அந்த தொழில் நுட்பத்தை சென்னையில் உள்ள முக்கிய தியேட்டர்களுக்கு பொருத்தி, படத்தை வெளியிட முடிவு செய்துள்ள கமல், அதற்காக, பிரபல ஹாலிவுட் கலைஞரை சென்னைக்கு வரவழைத்துள்ளார்.
— சினிமா பொன்னையாசசிகுமார் நடிக்கும், 'பிராமன்!'
தற்போது, 'சுந்தர பாண்டியன்' படத்தில் நடித்த சசிகுமார், அடுத்து, 'பிராமன்' என்றொரு படத்தில் நடிக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் அப்படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கமலின் உதவியாளர் சகார்த்தி இயக்குகிறார்.
— சி.பொ.,ப்ரியாமணி உறுதி!
'சாருலதா' படத்தில், ஒட்டிப் பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்துள்ள ப்ரியா மணிக்கு, அடுத்து படமே இல்லை. இருப்பினும், கவலைப்படாத அவர், 'இப்படத்தில், இதுவரை எந்த நடிகையும் நடிக்காத இரட்டையர் வேடத்தில் நடித்தது, எனக்கு பெரிய திருப்தியாக உள்ளது. இனி, வெயிட்டான படங்கள் கிடைத்தால் மட்டுமே நடிப்பேன்...' என்று உறுதியாக சொல்கிறார். வகை அறிந்து செய்தால் வாதம் பலிக்கும்!
— எலீசாவயதை சொல்லும் காஜல் அகர்வால்!
பொதுவாக எந்த நடிகர் - நடிகைகளுமே தங்களது நிஜ வயதை சொல்வதில்லை. ஆனால், 'துப்பாக்கி' மற்றும் 'மாற்றான்' படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால், சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடும் போது, 'எனக்கு 27 வயது...' என்று, வெளிப்படையாக கூறி உள்ளார். அவரது இந்த வெளிப்படையான பேச்சு, பல நடிகைகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதிசயமான ரம்பை; அரிசி கொட்டுகிற தொம்பை!
— எலீசாபுரோட்டா சூரிக்கு முக்கியத்துவம்!
'களவாணி' படத்தில், புரோட்டா சூரிக்கு காமெடியில் முக்கியத்துவம் கொடுத்த சற்குணம், அடுத்து தனுஷை வைத்து இயக்கும், 'சொட்ட வாளக்குட்டி' படத்திலும், சூரியையே முக்கிய காமெடியனாக்கியுள்ளார். 'வேலாயும்' படத்தில், விஜய்யின் நண்பனாக நடித்தது போல், இப்படத்திலும் தனுஷின் நண்பனாக படம் முழுக்க வருகிறாராம் சூரி.
— சி.பொ.,பாலிவுட்டில் இலியானா!
தெலுங்கு, 'போக்கிரி' படம், 'வான்டட்' என்ற பெயரில், இந்தியில் ரீ - மேக் ஆனபோது, பாலிவுட்டுக்கு செல்ல மறுத்துவிட்ட இலியானா, இப்போது, அதே சல்மான்கான் நடிக்கும், 'பர்பி' என்ற படம் மூலம், இந்திக்கு சென்றுள்ளார். தென்னிந்திய சினிமாவில், பட வாய்ப்பு குறைந்து விட்டதால், அடுத்து, இந்தியில், முழுக்கவனம் செலுத்தப் போவதாகவும் கூறுகிறார். இக்கரைக்கு அக்கரை பச்சை!
— எலீசாவாய்ப்பு கேட்கும் பூஜா ஹெக்டே!
'முகமூடி' தன்னை தமிழில் பெரிய நடிகையாக்கும் என்று கணக்குப் போட்ட பூஜா ஹெக்டேவுக்கும், 'சகுனி' ப்ரணிதா நிலைமைதான் ஏற்பட்டுள்ளது. படத்தில் பூஜாவுக்கு, தெறம காட்டும்படியான காட்சிகள் எதுவும் இல்லாததால், அவரை கண்டு கொள்ளவே இல்லை கோலிவுட். இருப்பினும், 'என் திறமைக்கேற்ற வாய்ப்பு, 'முகமூடி'யில் இல்லை. ஒரு நல்ல வாய்ப்பு கொடுத்து பாருங்கள். சூப்பராக நடித்துக் காட்டுகிறேன்...' என, சில டைரக்டர்களிடம் வா#ப்பு கேட்டு வருகிறார். இட்ட எழுத்துக்கு மேல் ஏற ஆசைப்பட்டால் கிடைக்குமா?
— எலீசாஇந்தி ஆர்வம்!
தமிழில் நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்து வருவதால், ஒரு சேஞ்சுக்காக, 'ராஞ்சா' என்ற இந்தி படத்தில் நடிக்கிறார் தனுஷ். இப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றால், அடுத்து தமிழைப் போலவே இந்தி படங்களிலும் தொடர்ந்து நடிக்கப் போவதாக கூறுகிறார்.
— சினிமா பொன்னையா
அவ்ளோதான்!
