தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல..

இதப்படிங்க முதல்ல..

இதப்படிங்க முதல்ல..


PUBLISHED ON : ஆக 21, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 21, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விஜய் நடிக்கும் அதிரடி ஆக்ஷன் படம்!

நண்பன் படத்திற்கு பிறகு, கவுதம் மேனன் இயக்கும், யோஹன் - அத்தியாயம் ஒன்று என்ற படத்தில் நடிக்கிறார் விஜய். 2012 ஏப்ரலில் படப்பிடிப்பு துவங்கி, 2013 பொங்கல் தினத்தில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. விஜய் அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிக்கவுள்ள இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும், அமெரிக்காவில் நடக்கிறது.

— சினிமா பொன்னையா.

வித்தியாசமான கெட்-அப்பில் அஜீத்!

வெங்கட் பிரபு இயக்கும், மங்காத்தா படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குளூனி என்பவரின் கெட்-அப்பில் நடித்துள்ளார் அஜீத். படத்தின் பெரும் பகுதியில் இந்த கெட்-அப்பில் தோன்றும் அஜீத், கடைசி கிளைமாக்சில் தான், தன் சொந்த கெட்-அப்புக்கு வருகிறார். அதனால், அஜீத்தின் இந்த மாறுபட்ட கெட்-அப் மற்றும் நடிப்பு, ரசிகர் களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் என்கிறார் வெங்கட் பிரபு.

— சி.பொ.,

மூன்று மொழியில் அசின்!

தெலுங்கில் பூரி ஜெகன்னாத் இயக்கிய, அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி என்ற படத்தில் அறிமுகமான அசின், அதே படத்தின் தமிழ் ரீ-மேக்கான, எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார். ஆனால், அதே படத்தை இந்தியிலும் ரீ-மேக் செய்யும் பூரி ஜெகன்னாத், அப்படத்தில் நடிக்கவும் அசினையே ஒப்பந்தம் செய்திருக்கிறார். இதனால், 'ஒரே கதையில் மூன்று மொழிகளிலும் நாயகியாக நடித்த ஒரே நடிகை நானாகத்தான் இருப்பேன்...' என்கிறார் அசின். அதிலே இது புதுமை, அவள் செய்து வைத்த அருமை!

— எலீசா.

தமிழில் யார் நம்பர் ஒன்?

அனுஷ்கா, த்ரிஷா, தமன்னா ஆகிய நடிகைகளின், தமிழ் சினிமா மார்க்கெட் பின் தங்கியே இருப்பதால், தற்போது, தமிழில் யார் நம்பர் ஒன் நடிகை என்ற குழப்பம் நிலவி வருகிறது. எதிர்பார்க்கப்பட்ட ஹன்சிகா மோத்வானியும் வீழ்ச்சி கண்டிருப்பதால், அடுத்தபடியாக உள்ள இலியானா, அமலா பால் இருவரும் அதிரடியாக படங் களை கைப்பற்றத் துவங்கி யுள்ளனர். இதில், அமலா பால் பிரபல ஹீரோக்களின் பட வாய்ப்பு என்றால், சம்பளத்தைப் பற்றி வாய் திறப்பதே இல்லை. படங்களை கைப்பற்றுவதி லேயே மும்முரமாக உள்ளார். பட்டறை வாய்த்தால் பணி வாய்க்கும்!

— எலீசா.

* கணவர் போனி கபூர் இந்தி சினிமா தயாரிப்பாளர் என்ற போதும், தன் மகள் ஜான்வியை இந்தியில் நடிக்க வைக்காமல், தமிழ் படத்திலேயே அறிமுகம் செய்ய கதை கேட்டு வருகிறார் ஸ்ரீதேவி.

சண்டையே இல்லாத அர்ஜுன் படம்!

கேளடி கண்மணி, ஆசை உள்பட பல படங்களை இயக்கிய வசந்த், சிறிய இடைவெளிக்குப் பிறகு, 3 பேர் 3 காதல் என்ற பெயரில் ஒரு படம் இயக்குகிறார். 'புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தில், அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதில், அர்ஜுனுக்கு ஒரு சண்டை காட்சி கூட கிடையாது. இப்படம் மூலம் அர்ஜுனை வேறு தளத்துக்கு கொண்டு செல்கிறேன்...' என்கிறார் வசந்த்.

— சினிமா பொன்னையா.

அவ்ளோதான்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us