PUBLISHED ON : ஜன 30, 2022

அ நிறம் | அளவு
மணமக்களைதேடும் விளம்பரங்களை, 'டிவி' மற்றும் பத்திரிகைகளில் பார்த்திருக்கிறோம்.கேரள மாநிலம், எர்ணாகுளத்தை சேர்ந்த ஓ.வி.சுரேஷ் என்பவர், பத்திரிகைகளில் மணமகள் தேவை என்று பல தடவை விளம்பரம் செய்து காத்திருந்தும், 17 ஆண்டுகளாக மணமகள் கிடைக்கவில்லை.இதையடுத்து, தன் போட்டோவுடன் மணமகள் தேவை என்று அச்சிட்டு, கேரளாவில் உள்ள, பாலாரிவட்டம் முக்கிய சாலையோரம், பேனர் வைத்தார். இதை லட்சக்கணக்கானோர் பார்த்து செல்கின்றனர். இப்பவாவது இவரை தேடி மணமகள் வருவாரா பார்ப்போம்.— ஜோல்னாபையன்
