
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காதலியை வெறித்தனமாக காதலிக்கும் காதலர்கள், உலகம் முழுவதும் இருக்கத் தான் செய்கின்றனர். இந்த விஷயத்தில், தென் கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சை சேர்ந்த, ட்ரங் வாம் லாம், 22, என்ற இளைஞர், ரொம்பவே வித்தியாசமானவராக இருக்கிறார்.
இவர், லுாவோங் கா, 20, என்ற பெண்ணை, கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார். சமீபத்தில், ஒரு தகராறு காரணமாக, காதலி, இவருடன் சண்டை போட்டு, பிரிந்து சென்றார். காதலியை சமாதானப்படுத்துவதற்காக, தன் முதுகில், காதலியின் படத்தை, 'டாட்டூ' எனப்படும் பச்சை குத்தியுள்ளார்.
இதற்காக, 24 மணி நேரத்தை செலவிட்டுள்ளார், அந்த இளைஞர். தன் காதலரின், இந்த வெறித்தனமான காதலைப் பார்த்த காதலி, கோபத்தை மறந்து, மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளார்.
- ஜோல்னாபையன்