தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அபூர்வ வெள்ளை ஒட்டக குட்டி!

அபூர்வ வெள்ளை ஒட்டக குட்டி!

அபூர்வ வெள்ளை ஒட்டக குட்டி!


PUBLISHED ON : ஏப் 17, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 17, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தேசிய ஒட்டக பரிசோதனை மையத்தில், மேவாரி இனத்தைச் சேர்ந்த ஒரு ஒட்டகம் உலகிலேயே மிகவும் அரிதான வெள்ளை நிற குட்டியை ஈன்றுள்ளது. இதுபோன்று வெள்ளை நிற ஆண் ஒட்டக குட்டி பிறந்துள்ளது, கடந்த, 27 ஆண்டில் இதுவே முதன் முறை. என்.ஆர்.சி.சி., என்ற தேசிய ஒட்டக மையத்தின் இயக்குனர் என்.வி.பாட்டீல் கூறுகையில், 'இது ஒரு அபூர்வ சம்பவம்...' என, தெரிவித்தார். வெள்ளை நிறத்தில் உள்ள இந்த ஒட்டக குட்டி, மிக ஜாக்கிரதையுடன் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இதுபோன்ற இனத்தை பெருக்குவதற்கு திட்டம் வகுத்து வருவதாகவும், இது, 50 சதவீதம் சாத்தியமாகும் என்றும் அவர் தெரிவித்தார். ராஜஸ்தான் ஒட்டக பரிசோதனை மையம், 1984ல் ஏற்படுத்தப்பட்டது. மேவாரி இன ஒட்டகங்களை பெருக்குவதற்கு, இந்த மையம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. தற்போது, இந்தியாவில், ஐந்து லட்சத்து, 17 ஆயிரம் ஒட்டகங்கள் உள்ளன; அதில், 80 சதவீதம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது.

— ஜோல்னா பையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us