
2003-06 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அல் கொய்தா பயங்கரவாதிகளால் சவுதி அரேபியாவும், பல இன்னல்களுக்கு ஆளானது. அப்போது, 150க்கும் அதிகமான சவுதி அரேபியர்களும், வெளிநாட்டினரும் கொல்லப்பட்டனர். சவுதி அரசு, 2,336 அல்கொய்தா பயங்கரவாதிகளை கைது செய்தது. கைதிகள் மனம் திருந்தி மீண்டும் பழைய வாழ்வுக்கு திரும்ப, பிரம்மபிரயத்தனம் செய்து வருகிறது.
அவர்களுக்கு, நல்ல சாப்பாடு, மனம் திருந்த ஆன்மிக பயிற்சி, உடம்பை சிக்கென பாதுகாக்க ஜிம், நீச்சல் குளம் என, எல்லாம் அமைத்துக் கொடுத்துள்ளது. உறவினர்கள், மற்றும் மனைவி வந்தால், தங்கி பேசி மகிழ, வசதியான அறையையும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. கால்பந்து மைதானத்தை, 12 பிரிவுகளாக பிரித்து, ஒவ்வொன்றிலும், 19 கைதிகளை தங்க வைத்து, இந்த சொகுசு வாழ்க்கையை அளித்து வருகிறது.
கைதி மனம் மாறி, நல்லபடியாக நடந்து கொண்டால், மனைவியுடன் இரண்டு நாள் சொகுசு அறையில் தங்கலாம். இவ்வளவு வசதிகள் செய்து கொடுத்தும், பயிற்சி முடிந்ததும், 10 சதவீதத்தினர் மீண்டும் அல்கொய்தா பயங்கரவாதிகளுடன் இணைந்து கொள்வதுதான் கொடுமை.
— ஜோல்னா பையன்.