PUBLISHED ON : ஆக 25, 2013

ஏழைகளின் வாழ்க்கை வளம் பெற, தங்கள் சொத்தின் பெரிய பகுதியை வழங்கும் கோடீஸ் வரர்களின் பெயர்கள், 'போர்ப்ஸ்' பத்திரிகையில் வெளியிடு வதுண்டு. இவர்களில், 27 வயது மலேசிய அழகியின் பெயரும் இடம் பெற்றுள்ளது. அவர் பெயர், பெட்ரோ ப்ரியா ஹென்றி. இவர், இரண்டு முறை, 'மிஸ் மலேசியா' அழகி பட்டம் பெற்றவர். இவரது கொள்ளு தாத்தா, தமிழகத்தில் இருந்து மலேசியாவிற்கு குடியேறியவர். டாகுமென்டரி எடுப்பது, பெட்ரோவின் பொழுதுபோக்கு. அகதிகளின் வாழ்க்கை பற்றி, படம் எடுக்க, முகாம்களுக்கு சென்ற போது, அங்கு கண்ட காட்சிகள், அவரை கண் கலங்க வைத்தது.
அவர்களை போல், வாழ்க்கை யில் அல்லல்படுவோருக்கு பண உதவி செய்து, மன ஆறுதல் பெற நினைத்தார். அப்படித் தான், தன் பெரும் சொத்துகளின் ஒரு பகுதியை அளித்து, பட்டி யலில் இடம் பிடித்து இருக்கிறார்.
இவர் தாய், ஐரிஷ் நாட்டைச் சேர்ந்தவர். அயர்லாந்தில் பிறந்த பெட்ரோ, வளர்ந்தது மலேசியா வில். இருந்தும், தனக்கு தமிழ் உறவு இருப்பதை பெருமையாக கூறுகிறார்.
— ஜோல்னா பையன்.
