
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைந்த, முன்னாள் இந்திய ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன், ஹிந்துவாக இருந்தாலும், அவர் உடல், கிறிஸ்துவ கல்லறையில் தான் அடக்கம் செய்யப்பட்டது. டில்லி பிருத்திவிராஜ் சாலையில் உள்ள கிறிஸ்துவ கல்லறையில், இவர் உடலுடன், மனைவி உஷாவின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது.
நேபாள நாட்டைச் சேர்ந்த கிறிஸ்துவர், உஷா. எனவே தான், கணவன் - மனைவி உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது.
இங்கு ஆயிரக்கணக்கான கல்லறைகள் உள்ளன. 1922ல் நடைபெற்ற ஜப்பான் விமான விபத்தில் வெளிநாட்டினர் உட்பட, 83 பேர் மரணமடைந்தனர். இவர்களில், 28 பேரின் உடல்களும் இங்கு தான் புதைக்கப்பட்டன. கல்லறைகள் அதிகம் இருந்தாலும், யாரும் அதை புதுப்பிக்க வருவதில்லை.
— ஜோல்னாபையன்