தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/23 கோடி ரூபாய்க்கு விற்பனையான மர்லின் மன்றோ ஆடை!

23 கோடி ரூபாய்க்கு விற்பனையான மர்லின் மன்றோ ஆடை!

23 கோடி ரூபாய்க்கு விற்பனையான மர்லின் மன்றோ ஆடை!


PUBLISHED ON : ஜன 01, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 01, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்களிடையே, மிகவும் பரிச்சியமான இந்த காட்சி, 56 வருடங்களுக்கு முன் வெளியான, 'தி செவன் இயர் - இச்' என்ற படத்தில் இடம் பெற்றது.

மர்லின் மன்றோ அணிந்திருக்கும் வெள்ளை நிற ஆடை, காற்றில் மேல் நோக்கி பறக்கும் போது, அவரது அழகான கால்களும், கொஞ்சம் உள்ளாடையும் தெரியும். அவரது ஆடை, மேலும் பறக்காமல் இருக்க, அவர் பிடித்துக் கொண்டிருப்பார்.

கலிபோர்னியாவில் சமீபத்தில் நடைபெற்ற ஏலத்தில், மர்லின் மன்றோ அணிந்த அந்த ஆடை, நினைத்துக் கூட பார்க்க முடியாத விலைக்கு, 23 கோடி ரூபாய்க்கு விற்பனை யானது. திரைப்பட காஸ்ட்யூம்களிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்டது இது தான்!

மர்லின் மன்றோ நடித்த, 'ஜென்டில்மென் ப்ரெபர் ப்ளான்ட்ஸ்' படத்தில் அணிந்த சிவப்பு நிற ஆடை, ஆறு கோடி ரூபாய்க்கும், ஆட்ரி ஹெப்பர்ன், 'மை பேர் லேடி' படத்தில் அணிந்த ஆடை, 18 கோடி ரூபாய்க்கும், எலிசபெத் டெய்லர், 'நேஷனல் வெல்வெட்' படத்தில் அணிந்த ஆடை, 30 லட்ச ரூபாய்க்கும் விற்கப் பட்டன.

ஆல்பிரெட் ஹிட்ச்காக் இயக்கிய, 'டு காட்ச் எ தீப்' படத்தில், கிரேஸ் கெல்லி அணிந்த ஆடை, இரண்டு கோடியே, 70 லட்சம் ரூபாய்க்கும் விற்பனையானது.

உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர், சார்லி சாப்ளின், 'தி லிட்டில் ட்ராம்ப்' படத்தில் அணிந்த தொப்பி, 67 லட்ச ரூபாய்க்கும் விற்று, சாதனை படைத்தது.

ஜோல்னா பையன்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us