தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மெத்தை விரிப்பு உடைகள் தான் வெளிநாடுகளில் இப்போ பேஷன்!

மெத்தை விரிப்பு உடைகள் தான் வெளிநாடுகளில் இப்போ பேஷன்!

மெத்தை விரிப்பு உடைகள் தான் வெளிநாடுகளில் இப்போ பேஷன்!


PUBLISHED ON : ஏப் 29, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 29, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'மேற்கத்திய நாடுகளிலிருந்து வந்த பேஷன்...' எனக் கூறி, நம்ம ஊர் பிரபலங்களும், இளைஞர்களும், ஜீன்ஸ், கவுன், கோட்-சூட் என, விதம் விதமான ஆடைகளை அணிந்து வலம் வந்து கொண்டிருக்க, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளிலோ, நிலைமை தலைகீழாக இருக்கிறது. மெத்தை விரிப்புகளுக்காக பயன்படுத்தப்படும் துணிகளில், உடைகள் தைத்துக் கொள்வது தான், அங்கு இப்போது பேஷன். மெத்தை விரிப்பு துணி என்று கூறுவதை விட, நம் ஊர்களில் பெரியவர்கள் அணியும், பட்டாபட்டி டிராயர் தைக்கப் பயன்படும் துணிகள் என்று கூறினால், 'பளிச்' என புரிந்து கொள்ளலாம்.

ஸ்பீடு, நெட் போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்த சாண்ட்ரா புல்லக், பிரிட்டனைச் சேர்ந்த பிரபல நடிகையும், பாடகியுமான ரிகானா, ஹாலிவுட் நடிகைகளும், பாப் பாடகிகளுமான லிண்ட்சே லோகான், சைரஸ் மைலி போன்ற பிரபலங்கள், பார்ட்டிகளுக்கும், முக்கியமான நிகழ்ச்சிகளுக்கும் இந்த மெத்தை விரிப்பு துணிகளால் தைக்கப்பட்ட உடைகளைத் தான் அணிந்து செல்கின்றனர். இவ்வளவு ஏன்? பிரிட்டன் ராணி எலிசபெத்துக்கு கூட, இந்த உடைகளை அணிவதில் ஆசை வந்து விட்டது. கூடிய விரைவில், இங்கேயும் இந்த பேஷன் வந்து விடும் என்பது மட்டும் நிச்சயம்.

இதைப் படித்தவுடன், உங்கள் வீட்டு மெத்தை விரிப்பை பார்த்து, அதில் உடைகள் தைக்கும் ஆசை உங்களுக்கு வந்தால், அதற்கு ஜோல்னாபையன் பொறுப்பல்ல.

— ஜோல்னா பையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us