தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சுறாக்களுடன் நீந்தி விளையாடிய சிறுமி!

சுறாக்களுடன் நீந்தி விளையாடிய சிறுமி!

சுறாக்களுடன் நீந்தி விளையாடிய சிறுமி!


PUBLISHED ON : செப் 02, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 02, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐந்து வயதே நிரம்பிய அனையா என்ற சிறுமியை, சுறா மீன்களுடன் விளையாட விட்டு, வேடிக்கை பார்த்துள்ளனர், அந்த சிறுமியின் பெற்றோர். இந்த வினோதமான குணாதிசயமுடைய பெற்றோர், அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். சமீபத்தில் பஹாமஸ் என்ற சுற்றுலா தலத்துக்கு சென்றபோது, தங்கள் மகளையும் கூட்டிச் சென்றனர்.

அங்கு, சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக, மிகப் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள குளத்தில், சுறா மீன்கள் துள்ளி குதித்து விளையாடுவதை பார்த்து, ஆச்சரியம் அடைந்த அனையா, தானும், அந்த சுறா மீன்களுடன் நீந்தி விளையாடப் போவதாக, பெற்றோரிடம் கூறினாள்.

சிறுமியின் விருப்பத்துக்கு, அவர்கள் தடை போடவில்லை. சுறா மீன்களுடன் நீந்தி விளையாட, தங்கள் மகளை அனுமதித்தனர். யார் செய்த புண்ணியமோ, சிறுமிக்கு எதுவும் ஆகவில்லை. ஒருவேளை சுறாக்கள், ஜாலி மூடில் இருந்ததோ, என்னவோ...

சுறாக்களுடன், தங்கள் மகள் விளையாடியதை வீடியோ எடுத்து, இணைய தளத்திலும் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ காட்சிகளை பார்த்து, கொதித்துப் போன மக்கள்,'ஈவு இரக்கமற்ற தாய் - தந்தையாக இருக்கின்றனரே...' என, கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.

ஆனால், சிறுமியின் பெற்றோர், 'எதில் தான் ஆபத்து இல்லை. வாழ்க்கையே கொஞ்ச காலம் தான். அந்த கொஞ்ச கால வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும், சுவாரசியமாக அனுபவிக்க வேண்டும். அதற்காகத் தான், இப்படி செய்தோம்...' என்று கூறுகின்றனர்.

— ஜோல்னா பையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us