PUBLISHED ON : ஜன 20, 2013

அ நிறம் | அளவு
'பெண்களுக்கு மட்டும் தான், அழகி போட்டி நடத்துவீர்களா? நாங்கள், யானைக்கான அழகு போட்டியை நடத்துகிறோம்...' என, நேபாளத்தில் நடத்தி காட்டியுள்ளனர். இந்த போட்டியில், நேபாளத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், 90 யானைகள் பங்கேற்றன. பாகன்களுக்கு கட்டுப்படுவது, கம்பீர தோற்றம், ஒழுக்கம், அலங்கரிப்பு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து, மதிப்பெண்கள் அளிக்கப்பட்டன. இதற்காக, மூன்று நடுவர்கள் வந்திருந்தனர். இறுதியாக, ஐந்து யானைகள் தேர்வு செய்யப்பட்டு, அதிலிருந்து, முதல் மூன்று யானைகள், தேர்வு செய்யப்பட்டன.
இதில், சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட, சித்வான் காலி என்ற யானை, முதல் பரிசை தட்டிச் சென்றது. இது, சித்வான் தேசிய பூங்காவைச் சேர்ந்தது. இரண்டாவது பரிசு, பிரகிர்த்தி காலி என்ற யானைக்கு கிடைத்தது.
— ஜோல்னா பையன்.
