தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அழகெல்லாம் முருகனே!

அழகெல்லாம் முருகனே!

அழகெல்லாம் முருகனே!


PUBLISHED ON : ஜூன் 12, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 12, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜூன் 13 - வைகாசி விசாகம்!

'முருகு' என்ற சொல்லுக்கு, அழகு என்று பொருள். பத்மாசுரன் எனும் அரக்கனால் அவதிப்பட்ட தேவர்கள், சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டனர். அவனை அழிக்க, சிவன் தன் நெற்றிக் கண்ணில் இருந்து, ஆறு பொறிகளை உருவாக்கினார்; அந்தப் பொறிகள், ஆறு குழந்தைகள் ஆயின. அவர்களை வளர்க்க கார்த்திகை பெண் களை நியமித்தார். பின், பார்வதிதேவி குழந்தைகளை ஒன்று சேர்க்க, ஆறு முகம் கொண்ட குழந்தை யானது.

தெய்வங்களில் முருகப் பெருமானே சிறந்த அழகுள்ளவர்; அவரது பெயரிலேயே அழகு இருக்கிறது. 'முருகு' என்றால், 'அழகு!' இசையரசர் முத்து சுவாமி தீட்சிதர் இவரைப் பற்றி, 'மநஸிஜ கோடி கோடி லாவண்யாய...' என்று பாடுகிறார். 'மநஸிஜன்' என்றால், 'மன்மதன்!' மன்மதனே எவ்வளவு அழகாக இருக் கிறான். முருகனோ கோடி, கோடி மன்மதன்களை ஒன்று சேர்த்தால் எப்படியிருக்கு மோ அப்பேர்ப்பட்ட அழகு டன் திகழ்ந்தார்.

அவரது <உடலழகு மட்டு மல்ல, மன அழகும் நம்மால் உற்று நோக்கப்பட வேண்டியதாகும். ஒரு கனியைக் கொண்டு வந்து, சிவனிடம் கொடுத் தார் நாரதர்; அதை விநாய கரும், முருகனும் கேட்டனர். 'உலகம் சுற்றும் போட்டியில் யார் வெல்கின்றனரோ, அவருக்கே பழம்...' என்றார் சிவன். மயிலில் கிளம்பி விட்டார் முருகன். அதற்குள் விநாயகர், அம்மையப்பனை, உலகமாகக் கருதி, சுற்றி வந்து பழத்தைப் பெற்றார். முருகன் கோபித்து, பழநிக்கு சென்று விட்டதாக புராணக் கதை.

ஒரு சாதாரண பழத்திற்காக அவர் கோபிக்கக் கூடியவரல்ல. கோபதாபங்களை எல்லாம் கடந்தவனே இறைவன். உண்மையில், தன் சகோதரனுக்கு பழம் கிடைக்க வேண்டுமென அவர் விரும்பினார். பழத்தை மட்டுமல்ல, தனக்கென ஒரு தனி உலகத்தை ஏற்படுத்தி, தாய் - தந்தையரின் உலகமான கைலாயத்தையும் அவருக்கே கொடுத்துச் சென்றார். சகோதரர் களுக்குள், விட்டுக் கொடுக்கும் தன்மை வேண்டும் என்பதை, மறைமுகமாக எடுத்துக் காட்டுகிறது இந்த புராணக் கதை.

எதிரியிடம் கூட கோபம் கொள்ளாத கருணைக்கடல் அவர். பத்மாசுரனை அவர் அழிக்கவில்லை; மாறாக, இரண்டாகப் பிளந்து, ஒரு பகுதியை சேவலாகவும், மற்றொரு பகுதியை மயிலாகவும் மாற்றிக் கொண்டவர். சூரபத்மனுக்கு கவுரவம் கொடுத்தவர்.

அதுமட்டுமல்ல... அந்த கருணைக் கடலின் அருளுக்கு உதாரணமாக இன்னொரு சம்பவத் தையும் எடுத்துக் காட்டலாம்...

முருகனின் தீவிர பக்தர், வீரபாண்டிய கட்டபொம்மன். திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஒரு மண்டபம் கட்டி, ஏழாம் திருநாளன்று சுவாமி அங்கு எழுந் தருள ஏற்பாடு செய் தார். ஏற்கனவே, ஏழாம் திருநாள் மண்டகப் படியை, முருக பக்தரான வடமலையப்ப பிள்ளை செய்து வந்தார். மன்னரே மண்டகப்படியை நடத்தும் போது, பிள்ளையால் என்ன செய்ய முடியும்? நமக்கு கொடுத்து வைத்தது அவ்வளவு தான் என, அமைதியாக இருந்து விட்டார்.

ஏழாம் திருநாளன்று சுவாமி எழுந்தருளி, புதிய மண்டபத் திற்கு வந்து கொண்டிருந்தார். வட மலையப்ப பிள்ளை கட்டி யிருந்த மண்டபம் அருகே வந்த போது, பெரும் சுழற் காற்று வீசியது, மழை கொட்டியது. சுவாமியை அங் கிருந்து அதற்கு மேல் கொண்டு செல்ல முடியாது என்பதால், அந்த இடத்திலேயே சுவாமியை வைத்து விட்டனர். கட்டபொம் மனுக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. வழக்கமான நடை முறையை மாற்றியது முருகனுக்கே பிடிக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டார்.

மழையில் நனைந்தபடியே ஓடி வந்து, வடமலையப்ப பிள்ளையிடம் மன்னிப்பு கேட்டார். தங்கள் மண்டபத்திலேயே சுவாமி எழுந்தருளட்டும் என்றார். சுவாமி, மண்டபத்துக் குள் நுழையவும், மழை நின்று விட்டது. இப்படி, தன் பக்தர்களுக்கு ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமின்றி அருள்பவர் முருகப் பெருமான்.

முருகன், கந்தன், கார்த்திகேயன், சரவணபவன் உள்ளிட்ட அவரது திருநாமங்களைச் சொன்னால், தீராத வினைகள் தீரும்; தீர்க்காயுள் கிடைக்கும். முருகனுக்கு ஆறுமுகங்கள் இருப்பதால், சர வணபவ, ஓம் குமராய நம என்ற ஆறெழுத்து மந்திரங்கள் சக்தி வாய்ந்தவையாக கருதப்படுகின் றன. இந்த மந்திரங்களை, 'ஆறெழுத்து அடக்கிய அருமறை' என்கிறார் நக்கீரர்; அதாவது, இவற்றை சொன்னால், வேதங்களையே முழுமையாகச் சொன்னதற்கு ஒப்பாகும்.

வைகாசி விசாகத் திருநாள், முருகனின் அவதார நாள். இந்த நன்னாளில், அவரது திருநாமத்தை உச்சரித்து, நல்லருள் பெறுவோம்.

***

-தி செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us