தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நம்ம ஊர் ஸ்பெஷல் - இளநீர் சர்பத்!

நம்ம ஊர் ஸ்பெஷல் - இளநீர் சர்பத்!

நம்ம ஊர் ஸ்பெஷல் - இளநீர் சர்பத்!


PUBLISHED ON : மே 28, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 28, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சூட்டை குறைத்து, உடலை குளுமையாக்க கூடியது, இளநீர் மற்றும் நன்னாரி!

மதுரையில், இவை இரண்டையும் சேர்த்து, 'இளநீர் சர்பத்' தயாரித்து அசத்துகின்றனர்.

சாயம் சேர்க்காத வெண்ணிற சர்பத்தில் தயாரிப்பதால், பதநீர் போன்று மங்கலான வெண்மை நிறத்தில் இருக்கிறது, இளநீர் சர்பத். ஒரு மிடறு விழுங்கும் போதே, உடலெங்கும் பரவும் குளுமையையும் மீறி, புதுச் சுவையை உணரலாம்.

இளநீரை, ஒரு டம்ளரில் ஊற்றி, அதில், ஜெல்லி போல், 'வழுவழு'வென இருக்கும் இளநீர் வழுக்கையை சேர்த்து, இரண்டு கரண்டி நன்னாரி சர்பத் ஊற்றினால், 'இளநீர் சர்பத்' தயார்!

சிம்மக்கல் அருகே, தமிழ்ச் சங்கம் சாலையில், பார்ப்பதற்கு கடை போலவே தெரியாத ஐந்து அடி அகல அறையில், இளநீர் நிரப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் வாசலில், இளநீர் சர்பத் விற்கும், ரவி, ''கடந்த, 35 ஆண்டுகளாக கடை வைத்திருக்கிறேன்;

ஆரம்பத்தில், இளநீர் மட்டுமே விற்றேன். கொஞ்சம் வித்தியாசமாக செய்யலாமே என்ற எண்ணமே, இளநீர் சர்பத் துவங்க காரணமானது. எங்கள் கடையை

தெரிந்தவர்கள், தேடி வந்து பருகி செல்கின்றனர். இளநீர் கடை என, நினைத்து வருவோரும், புதுச்சுவையில் மயங்கி, வாடிக்கையாளர்களாக மாறுவது உண்டு,'' என்றார்.

எல்லா நாட்களிலும் கடை உண்டு; மதுரை பக்கம் போனால், மறக்காமல், பருகி வாருங்கள்!

மு.ஆதவன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us