PUBLISHED ON : ஜூன் 20, 2010

அ நிறம் | அளவு
* இயற்கை அழகே
அழகு; அது
என்றும் உண்மை
அழகு!
மயக்கும் அழகு
கறுப்பு விழிக்கு
மையைப் போடுவானேன்?
மனதை மயக்கி
வாட்டுவானேன்?
* இயற்கையாக
இருக்கும் அழகே
என்றும் அழகு!
பிறர் பார்க்க வேண்டி
பண்ணும் அழகு
செயற்கையாக இருக்கும்;
அது செலவு நிறைய
பிடிக்கும்!
* நீண்ட கூந்தல்
அழகு! அதன்
வளைவு நெளிவு
அழகு!
கூந்தல் அழகை
வளைக்க அழகு
நிலையம் போதல்
எதற்கு?
கொட்டிக்
கொடுக்க காசா
இருக்கு?
* வயது ஏற
வளரும் நரைகள்
என்றும் அழகு!
அழகு!
அது வளரும் இடமும்
அழகு!
நரை மறைக்கவேண்டி
எடுக்கும் முயற்சி
காலநேரம் கெடுக்கும்
உண்மை காண நேர்ந்தால்
கசக்கும்!
* இயற்கை அழகு
அழகு! அது
என்றும் உண்மை
அழகு!
இயற்கை அழகை
செயற்கை அழகு
என்றும் வென்றதில்லை!
இதை உணர்ந்தால்
இல்லை தொல்லை!
— ஜீவன், கோவை.
