தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நவராத்திரி ஸ்பெஷல்!

நவராத்திரி ஸ்பெஷல்!

நவராத்திரி ஸ்பெஷல்!


PUBLISHED ON : அக் 15, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 15, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரப் புட்டு!

தேவையான பொருட்கள்: ஊற வைத்து, அரைத்து, பக்குவப்படுத்தப்பட்ட அரிசி மாவு - 1 கப், எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி, கடுகு, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், உப்பு மற்றும் எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: மாவை சலித்து, வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும். உப்பு கரைத்த தண்ணீர் சேர்த்து, மாவை பிசைந்து ஆவியில் வேக வைக்கவும்.

வெந்ததும், மாவை ஆறவிட்டு, உதிர்த்து, எலுமிச்சை சாறு, உப்பு சேர்க்கவும். கடுகு, பெருங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை தாளித்து, பரிமாறவும்.

பழ பாயசம்!

தேவையான பொருட்கள்: ஜவ்வரிசி - 100 கிராம், காய்ச்சிய பால் - 1/2 லிட்டர், தோல் நீக்கி அரைத்த மாம்பழம், வாழைப்பழம் - 2 கப், பேரீச்சம்பழம் - 10, அரைத்து வடி கட்டிய கருப்பு திராட்சை - 1 கப், சர்க்கரை - 100 கிராம், பச்சை கற்பூரம், ஏலப்பொடி - சிறிதளவு, நெய் - 4 தேக்கரண்டி.

செய்முறை: ஜவ்வரிசியை ஒரு தேக்கரண்டி நெய்யில் வறுத்து வேக விடவும். நன்றாக வெந்தவுடன் சர்க்கரை போட்டு நன்றாக கரைந்தவுடன் பழக்கூழ்கள், நறுக்கிய பேரீட்சை, காய்ச்சிய பால் விட்டு ஒன்றாக கலந்து கொதிக்க விடவும்.

கொதி வந்தவுடன், பச்சைக் கற்பூரம், ஏலப்பொடி, மீதி உள்ள நெய்யை ஊற்றி கலந்து இறக்கவும்.

வெஜிடபிள் அவல்!

தேவையான பொருட்கள்: அவல் - ஒரு கப், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, பச்சைமிளகாய் - 3, கேரட், பீன்ஸ், காலிபிளவர் (பொடியாக நறுக்கிய கலவை) - 1 கப், தேங்காய் - அரை மூடி, கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு.

வறுத்து பொடிக்க: வேர்க்கடலை, எள், பச்சரிசி - தலா இரண்டு தேக்கரண்டி. இவற்றை வெறும் வாணலியில் வறுத்து, ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்.

செய்முறை: அவலை தண்ணீரில் நன்றாக அலசி, வடிகட்டி வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, சீரகம் போட்டு தாளிக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, காய்கறி கலவையை சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின்னர் உப்பு, வடித்த அவல், தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கிளறி, வறுத்து பொடித்த பொடியை துாவி, கலந்து இறக்கவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us