
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள், லட்சுமிக்கும்; அடுத்த மூன்று நாட்கள், சக்திக்கும்; கடைசி மூன்று நாட்கள், சரஸ்வதிக்கும் உரியதாக தமிழகத்தில், விழா எடுக்கிறோம். இதற்கு காரணம், வாழ்க்கைக்கு தேவை பணம் மற்றும் பிற வசதிகள். இதை பெறுவதற்கு, முதலில், லட்சுமியை துதிக்கிறோம்.
அப்பணத்தை பாதுகாக்க தைரியத்தையும், அதற்கான வழி முறையையும் வேண்டி, சக்தியாகிய துர்க்கை, காளி இன்னும் பிற காவல் தெய்வங்களை வணங்குகிறோம்.
பின், பாதுகாக்கப்பட்ட அப் பணத்தை, கல்வி போன்ற பயனுள்ள காரியங்களுக்கு பயன்படுத்த சரஸ்வதியை வழி படுகிறோம்.
காரண காரியங்களுடன் வகுக்கப்பட்டது தான், நவராத்திரி பூஜை!

