தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/புத்தாண்டு கொண்டாட்டம்!

புத்தாண்டு கொண்டாட்டம்!

புத்தாண்டு கொண்டாட்டம்!


PUBLISHED ON : டிச 26, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 26, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐரோப்பிய நாடான ஜெர்மனி மக்கள், புத்தாண்டை ஆடல், பாடல்களுடன் வரவேற்கின்றனர்; புத்தாண்டு தீர்மானங்கள் எடுக்கின்றனர். எதிர்காலம் பற்றி கணித்து கூறும் நிகழ்வு தான், ஜெர்மனில் புத்தாண்டின் மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு உரியதாக இருக்கிறது.

ஈயத்தை உருக்கி குளிர்ந்த நீரில் ஊற்றுகின்றனர். அந்த நீரில் வரும் ஈயத்தின் அமைப்பை கொண்டு எதிர்காலத்தை கணிப்பது, ஜெர்மனிய புத்தாண்டு தினத்தின் ஸ்பெஷல்.

புத்தாண்டுக்கு முந்தைய நாள் மாலையில், தங்களிடம் இருக்கும் உணவு தானியத்தில் சிறிதளவை தானமாக கொடுப்பர். அப்போதுதான் வரும் ஆண்டில், அதிக அளவு உணவு கிடைக்கும் என்றும் நம்புகின்றனர்.

ஜெர்மனிய மக்களின் புத்தாண்டு விருந்தில், மது வகைகள் அதிகம் இடம்பெறும்.

முட்டைக்கோஸ் சாப்பிடுவதால், பிறக்கும் ஆண்டு நெருக்கடி இல்லாமல் இருக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

* ஆங்கில புத்தாண்டை விளையாட்டு போட்டிகள் நடத்தி கொண்டாடுகிறது ஐரோப்பிய நாடான, பல்கேரியா. ஜனவரி 1ம் தேதி துவங்கி, ஒரு வாரம் இசை விழா நடக்கும். புதிய ஆண்டை வரவேற்கும் விதமாக, பட்டாசுகளை வெடிப்பர். புத்தாண்டு துவங்குவதற்கு பல நாள் முன்பே விருந்து நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பர்.

'பனிக்கா' என்ற பாரம்பரிய உணவை புத்தாண்டு சிறப்பாக தயாரிக்கின்றனர். புத்தாண்டு இரவில் பாரம்பரிய நடனம் ஆடும்போது, பெண்களின் எதிர்காலம் பற்றிய ஜோதிடம் சொல்லும் வழக்கமும் பல்கேரியாவின் பல பகுதிகளில் காணப்படுகிறது.

* ஜனவரி 1ம் தேதி புத்தாண்டை கோலாகலமாக வரவேற்கும் ஐரோப்பிய நாடான பிரான்ஸ் மக்களுக்கு, ஆறு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆறாவது நாளில் ஸ்பெஷல் புத்தாண்டு கேக் வெட்டும் நிகழ்ச்சியோடு புத்தாண்டு நிறைவு பெறும்.

பிரெஞ்ச் புத்தாண்டு கொண்டாட்டத்தில் முக்கிய இடம் பிடிப்பது ஊர்வலம் தான். ஆயிரக்கணக்கான பாடகர்களும், நடன கலைஞர்களும் அந்த ஊர்வலத்தில் உற்சாகமாக பங்கெடுப்பர். இந்த ஊர்வலம், டிச., 31ம் தேதி துவங்கி, ஜனவரி 1ம் தேதி, ஈபிள் பவர் பகுதியில் நிறைவடையும்.

* கடந்த, 1691ம் ஆண்டு முதல், ஜனவரி 1ம் தேதியை தங்களின் புத்தாண்டாக கொண்டாட துவங்கினர்,ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த, ஆஸ்திரிய மக்கள். புத்தாண்டின்போது, தேவாலயங்களில் நள்ளிரவு ஜெபக் கூட்டங்கள் நடக்கின்றன. தேவாலய உச்சியிலிருந்து டிரம்பட் இசைக்கருவி வாசிக்கப்படுகிறது.

புத்தாண்டு சிறப்பு உணவாக பன்றி இறைச்சியை உண்கின்றனர். பன்றி இறைச்சி உண்பது அதிர்ஷ்டத்தை தருமாம்.

புத்தாண்டு தினத்தின் காலையிலும் பிரார்த்தனை கூட்டங்கள் நடக்கின்றன. குழந்தைகள் வீடு வீடாக சென்று, 'கேரல்ஸ்' பாடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us