தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அலுவலக அரசியல்... - சமாளிப்பது எப்படி?

அலுவலக அரசியல்... - சமாளிப்பது எப்படி?

அலுவலக அரசியல்... - சமாளிப்பது எப்படி?


PUBLISHED ON : ஆக 23, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 23, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வீட்டுக்குள் எழும், 'அரசியல்' பிரச்னையை, நாலு சுவற்றுக்குள் ஓரளவுக்கு பேசி சமாளித்து விடலாம். ஆனால், ஒருவரை இன்னொருவர் கவிழ்க்க பார்க்கும், அலுவலக அரசியலை சமாளிப்பது, ரொம்ப கஷ்டம். பொதுவாகவே அலுவலக பாலிடிக்சில் சிக்காமல் இருக்க என்ன தான் வழி...

உங்களை ஏதாவது ஒரு விஷயத்தில் சிக்க வைக்க பார்ப்பர், சிலர். அதிலும், ஒரே குழுவாக இணைந்து வேலை செய்யும்போது, வேலையில் ஏதாவது தவறு ஏற்பட்டால், அதற்கு, உங்களை காரணமாக்கி சிக்க வைக்க பார்ப்பர்.

இந்த மாதிரி நேரத்தில், தப்பு உங்கள் மேல் இருந்தாலும், இல்லா விட்டாலும், அதை பற்றி நேரடியாக உங்கள் நிர்வாகியிடம் பேசி, விளக்கம் கொடுத்து விடுங்கள். உங்க மேல் தப்பு இல்லையெனில், அதை விளக்கமாக சொல்ல பாருங்கள். தப்பிருந்தால், அதற்கு மன்னிப்பு கேட்பதுடன், அதை சரி செய்ய வாய்ப்பும் கேளுங்கள்.

அலுவலகத்தில் எப்போதும் உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில், 'என்ன கேட்டா... அப்படி'ன்னு ஆரம்பித்து, 'அட்வைஸ்' பண்ண ஆரம்பித்து விடாதீர்கள். இப்படி சம்பந்தமில்லாத விஷயங்களில் மூக்கை நுழைத்தால், நிறைய பேரின் கோபத்தை தான் சம்பாதிப்பீர்கள். இதன் விளைவு, உங்களுடைய சின்ன சின்ன குறைகளை கூட சரியான நேரத்தில், உங்கள் நிர்வாகியிடம் போட்டுக் கொடுத்துவிடுவர்.

'கிசுகிசு' பேசுவதற்கும், உடன் வேலை பார்ப்பவர்களை கேலி செய்வதற்கும் எல்லா அலுவலகத்திலும் ஒரு கும்பல் இருக்கும். அது, உங்களை பற்றி, 'கிசுகிசு' பேசினால், வருத்தப்படாதீர்கள். கேலி செய்தால், கண்டுக்கவே கண்டுக்காதீர்கள்.

அதே நேரத்தில், இந்த கும்பலுடன் சேரவும் சேராதீர்கள். நிர்வாகம், உங்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கையை இழந்துவிடும். உடன் பணிபுரியும் யார் மேலாவது உங்களுக்கு நல்ல அபிப்ராயம் இல்லையென்றால் கூட, அதை உங்கள் மனதுடன் வைத்துக் கொள்வது தான் நல்லது.

உங்களுக்கு கொடுத்த வேலையை, குறிப்பிட்ட நேரத்துக்குள் முடித்து கொடுத்து விட்டால், எந்த அலுவலக அரசியலும் ஒண்ணும் பண்ண முடியாது.

நிர்வாகிக்கு, 'ஐஸ்' வைக்கிற கெட்ட பழக்கத்தை கண்டிப்பாக, 'அவாய்டு' செய்யுங்கள்.

'சே... இந்த அலுவலகமே மோசம்'ன்னு சொல்லும், 'நெகட்டிவ்' பேர்வழிகள் சிலர் இருக்க தான் செய்வர். தயவு தாட்சண்யம் பார்க்காமல், இவர்களின் நட்பை, 'கட்' செய்து விடுங்கள். உங்களுடைய குறைகளை எடுத்து சொல்லி, உங்கள் புரொபஷனல் வாழ்க்கைக்கு உதவும், 'பாசிட்டிவ்' நட்புகளுக்கு, ஓ.கே., சொல்லுங்கள்.

ஜி. கமல்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us