தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கால்களை உயரமாக்க, ஒரு கோடி ரூபாய்!

கால்களை உயரமாக்க, ஒரு கோடி ரூபாய்!

கால்களை உயரமாக்க, ஒரு கோடி ரூபாய்!


PUBLISHED ON : ஜூலை 30, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 30, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜெர்மன் நாட்டின் பிரபலமான மாடல் அழகி, தெரேசியா பிஷ்ஷர். குள்ளமாக இருந்த இவர் வயது: 31. ஜெர்மன் நாட்டு, 'டிவி'யில் ஒளிபரப்பான, புகழ் பெற்ற, 'பிக் பிரதர்ஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். தற்போது, தன் கால்களின் நீளத்தை அதிகரிக்க, ஒரு கோடி ரூபாய் செலவழித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன், திருமணமாகி விவாகரத்து பெற்றவர், தெரேசியா பிஷ்ஷர். குள்ளமாக இருப்பதால், பலரின் ஏளனப் பேச்சுக்கும்,கொடுமைகளுக்கும் ஆளானார்.

இதிலிருந்து மீண்டு, தன் இமேஜயை அதிகரிக்கவும், மாடல் உலகில் புதிய வாய்ப்புகள் பெறவும், இரண்டு கடினமான ஆபரேஷன்கள் மூலம், தன் கால்களின் உயரத்தை, 5.5 அங்குலம் அதிகரித்து உள்ளார்.

கால்களை உயரமாக்கும் ஆபரேஷன்கள், மிகவும் கடினமான மற்றும் வேதனையை தருபவை. இந்த அறுவை சிகிச்சையில், தொடை எலும்புகளை உடைத்து, இரண்டு, 'அட்ஜஸ்ட்டபிள் டெலஸ்கோபிக் ராடு'களை பொருத்தி, கால்களின் உயரத்தை அதிகரிப்பர்.

தற்போது, 6 அடி உயரத்தில் இருக்கிறார்.

'கால்களின் உயரத்தை அதிகரித்த பின், மகிழ்ச்சியாக இருக்கிறேன். புதிய மாடலிங் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. புதிய பாய் பிரண்டும் கிடைத்துள்ளான்...' என்கிறார், தெரேசியா பிஷ்ஷர். இன்ஸ்டாகிராமில் இவரை, இரண்டு லட்சம் பேர் தொடர்கின்றனர்.

— ஜோல்னா பையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us