தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இப்படியும் ஒரு கடைசி ஆசை!

இப்படியும் ஒரு கடைசி ஆசை!

இப்படியும் ஒரு கடைசி ஆசை!


PUBLISHED ON : மே 24, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 24, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தென் ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த பிரபலமான அரசியல்வாதி, டெஸ்கெடே பஸ்டன் பிட்சோ. 'ஐக்கிய ஜனநாயக' கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்தவர்.

இவர், 1999ல் வாங்கிய, 'மெர்சிடிஸ்' காரை, தன் உயிருக்கு மேலாக நேசித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே, அந்த கார், அவரது வீட்டு வளாகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த காரை வெளியில் எடுத்துச் செல்வது இல்லை, பிட்சோ. அவ்வப்போது காரில் ஏறி அமர்ந்து, அதில் உள்ள ரேடியோவை இயக்கி, பழைய பாடல்களை கேட்பார்.

'நான் இறந்ததும், அந்த காரில் என்னை அமர வைத்து, காருடன் சேர்த்து புதைத்து விடுங்கள்...' என, தன் குடும்பத்தினரிடம் கூறி வந்தார்.

இந்நிலையில், சமீபத்தில், அவர் காலமானார். இதையடுத்து, டிரைவர் சீட்டில், பிட்சோவின் உடலை அமர வைத்து, மிகப்பெரிய பள்ளம் தோண்டி, காருடன் சேர்த்து புதைத்து, அவரது இறுதி ஆசையை நிறைவேற்றினர், குடும்பத்தினர்.

— ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us