தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை

திண்ணை

திண்ணை


PUBLISHED ON : மே 21, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 21, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆர்.சி.சம்பத் எழுதிய, கற்பகம் புத்தகாலய வெளியீடான, 'இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி' நூலிலிருந்து: உலகப் புகழ் பெற்ற, அரபு மொழிப் பாடகியான,

ஓம் குஸ்ஸும் எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாடலைக் கேட்டு பரவசமாகி, எம்.எஸ்.,சை ஆரத் தழுவி, அக மகிழ்ந்தவர், உடனே, பேப்பரும், பேனாவும் எடுத்து, அவரின் இசைத் திறனை வாழ்த்தி, தன் கைப்பட பாராட்டு கடிதம் எழுதி, கையொப்பம் இட்டு கொடுத்தார்.

அதில், 'பெரும் புகழ் வாய்ந்த பாடகிக்கு, என் மனமுவந்த பாராட்டுகளை, தங்களது அதி அற்புத கானத்திற்காக தெரிவித்துக் கொள்கிறேன்...' என்று, அரபு மொழியில் எழுதப்பட்டிருந்தது.

மனிதன் ஆயிரம் மொழிகளை கற்றிருந்தாலும், அவனது இதயமொழி, தாய்மொழி தானே!

ஓம் குஸ்ஸும் ஆழமான ஆங்கில அறிவு பெற்றிருந்தபோதிலும், உணர்ச்சி மேலீட்டில், தன் தாய்மொழியிலேயே வாழ்த்து எழுதியதில் ஆச்சரிய மில்லை!

'எலுமிச்சை மருத்துவம்' நூலிலிருந்து: எலுமிச்சை பழ சாறை, எந்த பொருளில் கலந்தாலும், அது, அப்பொருளின் தரத்தை, உயர்த்திவிடும். பச்சை காய்கறியுடன் எலுமிச்சை சாறை கலந்து பயன்படுத்தினால், அக்காய்கறி தரும் பலன், மேலும் அதிகரிக்கிறது.

மலையேறும் குழுவினர், எலுமிச்சைப் பழத்தை ஏன் கையோடு எடுத்துச் செல்கின்றனர் தெரியுமா?

மிக உயரமான இடங்களில், ஆக்சிஜன் குறைவாக இருக்கும். அங்கு, எலுமிச்சை ரசத்தை அருந்தினால், சுவாசம் சீர்படும். 'ஆக்சிஜனை உள்ளடக்கிக் கொண்டிருக்கும் கிடங்கு...' என்று, எலுமிச்சம் பழத்தை கூறலாம்.

எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த, டென்சிங் மற்றும் ஹில்லாரி இருவரும், தங்களுடைய மலையேற்றத்துக்கும், வெற்றிக்கும் எலுமிச்சை

மிகவும் உதவியதாக கூறியுள்ளனர்; மலையேறும்போது, சோர்வு ஏற்பட்ட போதெல்லாம், எலுமிச்சை சாறு பருகினராம்!

'திரை பிரபலங்கள்' நூலிலிருந்து: இயக்குனர் பாரதிராஜா, ஒருமுறை சிவாஜி கணேசனிடம், 'தேனியிலிருந்து நடிப்பதற்காகத் தான் சென்னைக்கு வந்தேன்; ஆனால், இங்கே வந்து கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தபோது தான், நடிக்க நான் லாயக்கில்லைன்னு தெரிஞ்சுது...' என்றாராம்.

'ஏன், தேனியில கண்ணாடி இல்லையோ?' என்று கேட்டாராம் சிவாஜி!



'வாரியார் சொற்பொழிவில் கேட்டவை' நூலிலிருந்து
: குருட்டுப் பசு ஒன்று, ஊர் போய் சேர வழி தெரியாமல், அங்கும், இங்குமாக அலைந்தபடி இருந்தது. அன்புள்ளம் கொண்ட ஒருவர், இதைப் பார்த்து, அப்பசுவை, பசு மந்தையில் கொண்டு போய் சேர்த்து விட்டார். முன்னும், பின்னுமாக இரண்டு பக்கங்களிலும் உராய்ந்து, கண்ணில்லாத அப்பசுவும், ஊர் போய் சேர்ந்தது.

அதுபோல, ஞானக்கண் இல்லாதவர், எண்ணற்ற பெருமை உடைய திருத்தொண்டர் கூட்டத்தில் சேர்ந்து விட்டால், எளிதாக முக்தியை அடையலாம்.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us