தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : செப் 15, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 15, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'மாவீரன் உத்தம் சிங்' நுாலிலிருந்து: ஜாலியன் வாலாபாக்கில், ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்த, ஆங்கிலேய அதிகாரி, ஜெனரல் டயரை நமக்கு தெரியும். இந்திய வரலாற்றின் மறக்க முடியாத, ஜாலியன் வாலாபாக் கோர சம்பவம்,

15 நிமிடங்களுக்குள் நடந்தேறியது. 1,000க்கும் மேற்பட்டோர், ஜெனரல் டயர் என்பவனால், கொன்று குவிக்கப்பட்டனர். 2,000க்கும் அதிகமானோர், குற்றுயிரும் குலை உயிருமாக துடித்தனர்.

ஒவ்வொரு துப்பாக்கி வீரனும், 33 ரவுண்டு சுட்டிருந்தான். மொத்தம், 1,650 ரவுண்டு சுடப்பட்டது. செத்து விழுந்த உடல்கள், ரத்த வெள்ளத்தில் மிதந்தன. தப்பி பிழைத்தவர்கள், நடக்க முடியாமல், வீதியில் விழுந்து கிடந்தனர்.

'என்னை மதிக்காத இந்தியர்களுக்கு, நான் அளித்த தண்டனை இது. ஒரு ராணுவ அதிகாரியாக, இந்த செயலுக்காக நான் சந்தோஷம் அடைகிறேன். என்னிடம், இன்னும் அதிக ஆயுதங்கள் இருந்திருந்தால், அதிக நேரம் சுட்டிருப்பேன்...' என்று, வெளிப்படையாக தெரிவித்தான், ஜெனரல் டயர்.

ஜெனரல் டயரை பற்றி, இங்கிலாந்திலிருந்து வெளியாகும், 'மார்னிங் போஸ்ட்' என்ற பத்திரிகை, 'வெற்றி நாயகன்' என, பாராட்டி எழுதியிருந்தது.

'இந்த படுபாதக செயலுக்கு காரணமாக விளங்கிய, பஞ்சாப் கவர்னர், மிக்கேல் ஓ டயர் மற்றும் ஜெனரல் டயர் ஆகியோரை பழிவாங்குவேன்...' என்று, உத்தம் சிங் என்ற, பஞ்சாப் மாநில இளைஞன், சபதம் செய்தான்.

ஜாலியன் வாலாபாக் படுகொலை, இந்தியாவை உலுக்கியது.

இங்கிலாந்தில், எச்சில் தட்டு கழுவி, கூலி வேலை செய்து கிடைத்த பணத்தில் துப்பாக்கி வாங்கினான், உத்தம் சிங். சொன்னபடியே, 21 ஆண்டுகள் காத்திருந்து, மார்ச் 13, 1940ல், கவர்னர், மிக்கேல் ஓ டயரை சுட்டு தள்ளினான்.

உத்தம் சிங்கின் செயல், இந்திய மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், 'இது பைத்தியக்காரத்தன செயல்...' எனக் கூறி, அறிக்கை வெளியிட்டார், காந்திஜி.

நேரு மற்றும் பலர், பஞ்சாப் காங்கிரஸ் அரசையும், உத்தம் சிங்கின் செயலை கண்டித்தும், டயரின் மனைவிக்கு ஆறுதல் தெரிவித்தும், தீர்மானம் இயற்ற வைத்தனர். இதை கடுமையாக எதிர்த்து, உத்தம் சிங்கின் செயலை பாராட்டி கடிதம் எழுதினார், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

நேருவின் சதியால், காங்கிரசிலிருந்து திட்டமிட்டு, காந்திஜியால், இழிவுபடுத்தப்பட்டார், நேதாஜி. இதுவும், காந்திஜி, நேதாஜி இடையே பிளவு ஏற்பட, ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

இந்த கொலை வழக்கில், உத்தம் சிங்குக்கு, துாக்கு தண்டனை விதித்தது, இங்கிலாந்து நீதிமன்றம்.

ஜூலை 31, 1940ல், 'வந்தே மாதரம்' கோஷத்துடன், துாக்கு கயிறை முத்தமிட்டார், உத்தம் சிங். அதற்கு முன், 'துாக்கில் போட்டவுடன், இங்கிலாந்து மண்ணிலேயே என்னை புதைத்து விடுங்கள். இத்தனை ஆண்டுகள், இந்திய மண்ணை, இங்கிலாந்து ஆண்டது போல், இங்கிலாந்தின், 6 அடி மண்ணை, ஓர் இந்தியன் நிரந்தரமாக அபகரித்துக் கொண்டான் என்பது, ஒரு மாறாத அவமானமாக உங்களுக்கு அமையட்டும்...' என்று, முழங்கினார்.

'தியாக சிங்கம்' என அழைக்கப்பட்ட, உத்தம் சிங்கின் உடல், சீக்கிய மத சடங்குகளுக்கு தடை விதிக்கப்பட்டு, சிறைச்சாலையிலேயே புதைக்கப்பட்டது.

பஞ்சாப் மாநிலம், சுல்தான்பூர் சட்டசபை உறுப்பினர், எஸ்.சாது சிங், 'உத்தம் சிங்கின் எலும்பு கூடுகளையாவது இந்தியாவிற்கு எடுத்து வரவேண்டும்...' என்று, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார்.

அன்றைய பிரதமர், இந்திரா, இதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

உத்தம் சிங் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி, மிச்சம் மீதியிருந்த எலும்பு கூடுகளை கட்டி, 35 ஆண்டுகளுக்கு பின், 1975ல், இந்தியாவிற்கு அனுப்பியது, இங்கிலாந்து அரசு.

உத்தம் சிங்கின் எலும்பு கூடுகள், ராஜ மரியாதையோடு, அவரின் சொந்த ஊரில் எரியூட்டப்பட்டு, சாம்பல், கங்கை ஆற்றில் கரைக்கப்பட்டது.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us