தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : பிப் 26, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 26, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கண்ணதாசன் எழுதியது...

என்னைப் பற்றி ஏராளமான வதந்திகள்; நான் குடித்துவிட்டுத் தான் எழுதுவேன் என்றும், குடித்துவிட்டுத் தான் மேடையில் பேசுவேன் என்றும், குடித்தால் தான், என் மனநிலை சரியாக இருக்கும் என்றும், விதவிதமான கதைகள்.

ஆந்திராவிலிருந்து, லதா என்ற ஒரு பத்திரிகை ஆசிரியர், இரண்டு ஆண்டுகளுக்கு முன், என்னைப் பார்க்க வந்தபோது, கையில் இரண்டு விஸ்கி பாட்டில்களையே வாங்கி வந்து விட்டார்.

ஒரு தடவை, நான் மலேசியாவில், ஓரு ஊரில் கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும் போது, ஒரு டம்ளரைக் கொண்டு வந்து வைத்தனர். நான் சோடா என்று எண்ணிக் குடித்த போது, அது விஸ்கியாக இருந்தது.

பொதுவாக நான் எழுதிவிட்டு, பேசிவிட்டுத்தான் குடிப்பேன்.

நான், தி.மு.க.,வில் இருந்த போது, செல்லும் ஊர்களிலெல்லாம், என்னை குடிகாரன் என்று ஏசுவர் காங்கிரஸ்காரர்கள். அதன் பலனாக, உத்தமமான கழகத் தொண்டர்கள், நான் போகும் போது, முன்னேற்பாடாக விஸ்கி வாங்கி வைத்திருப்பர்.

தலைவர் காமராஜரோடு, வெளியூர் கூட்டங்களுக்கு செல்லும் போது, இரவில் தலைமறைவாகி விடுவேன். அவர், 'கண்ணதாசன் எங்கே, எங்கே?' என்று தேடுவார். பிறகு, சிரித்துக் கொண்டே, 'சரிதான் புரிகிறது!' என்று சொல்லி விடுவார்.

டில்லியில் ஒரு தடவை நான், 'பிரதமரை பார்க்க வேண்டும்' என்று, நந்தினி சத்பதியிடம் சொல்லியிருந்தேன். மதியம், ஒரு மணிக்கு அசோகா ஓட்டலுக்கு நந்தினி சத்பதி போன் செய்து, 'மாலை 4:30க்கு வாருங்கள்' என்றார்; நான் நன்றாகக் குடித்துவிட்டு, தூங்கி விட்டேன். நந்தினி வருத்தப்பட்டார்.

டில்லியில் ஒரு முறை, 'குழந்தைக்காக' படத்தில், நான் எழுதிய பாடல் ஒன்றுக்காக, அகில இந்தியப் பரிசு கொடுத்தனர். மாலை, 5:00 மணிக்குப் பரிசளிப்பு விழா; நானோ வழக்கம் போல் தூங்கி விட்டேன். வழக்கம் போலவே, அங்கு வந்திருந்த என் சகோதரர், ஏ.எல்.சீனிவாசன் பரிசைப் பெற்றுக் கொண்டார்.

***

தமிழ் எழுத்துக்கள், 'அ' முதல், 'ஒள'வரை, வாழ்க்கையின் பல உண்மைகளை உணர்த்துகின்றன.

முதல் இரண்டு எழுத்துக்களான, 'அ, ஆ' மனிதன் குழந்தையாகவும், பாலகனாகவும் உலக நடப்புகளைப் புரிந்து கொள்ள முடியாமல், 'அ... ஆ!' என்று வாய் பிளந்து அதிசயிக்கும் காட்சியைக் குறிக்கும்.

பாலகன் இளைஞனாகி வாலிப முறுக்கில், பெண்ணின் மையலில் அசடாகி, 'இ...ஈ...' என்று இளிக்கிறான்.

தாம்பத்திய சுகத்தை அனுபவிக்கும் நிலையில், 'உ...ஊ...ம்... இது தானா?' என்று புதிரைப் புரிந்து கொள்கிறான்.

'ஊ'வின் முதுகில் ஏறியிருக்கும், 'ள' குடும்பச் சுமை குடியிருப்பதைக் காட்டும்.

அடுத்து, குடும்பத் தலைவனாக, 'ஏ... ஏய்!' என்று பிள்ளைகளையும், மற்றவரையும் ஆட்சி செய்கிறான்.

மகனுக்கு, மனைவி வருகிறாள். தந்தை, பெரியவராகி, தன்னை அடக்கிச் சுருட்டிக் கொண்டு, 'ஐ' என்று உட்கார நேருகிறது.

மகன், இளம் மனைவியின் புது மயக்கத்தில், தலை கால் புரியாமல் ஆடுகிறான். பெரியவர், 'ஒ...ஓ...' அவ்வளவு தூரத்துக்கு ஆயிட்டுதா!' என்று ஈன ஸ்வரத்தில் அங்கலாய்க்கிறார்.

பெரியவர் தாத்தாவாகிறார். வளைந்து, குடும்பத்தில் தனித்து தேவையற்ற பொருளாகி விடுகிறார். 'ஒள' வில், 'ள' போல.

எதையும் மும்முறை செய்துவிட்டால், இறுதியாகச் செய்து விட்டதாக அர்த்தம். பிறப்பில் தொடங்கிய வாழ்க்கை, இறப்பில் இறுதி நிலை அடைந்து, 'முக்தி' பெறுவதற்கு இந்தப் பிராயம் சாதனம் என்பதை, மூன்று புள்ளியிட்ட ஆயுத எழுத்து உணர்த்தும்.

— ஒரு உபன்யாசத்தில் கேட்டது.

***

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us