தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/'பிளேபாய்' ஆசையை நிறைவேற்றிய பமீலா!

'பிளேபாய்' ஆசையை நிறைவேற்றிய பமீலா!

'பிளேபாய்' ஆசையை நிறைவேற்றிய பமீலா!


PUBLISHED ON : ஜன 10, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 10, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமெரிக்காவிலிருந்து வெளியாகும், 'பிளேபாய்' பத்திரிகைக்கு, உலகம் முழுவதும் வாசகர்கள் உண்டு. இப்புத்தகத்தின் அட்டையில், சினிமா, மாடலிங் மற்றும் பாப் பாடகிகளின் கவர்ச்சி படங்கள் இடம் பெறுவது வழக்கம். புத்தகத்தின் அட்டையில் தங்கள் படம் இடம்பெறுவதை, பிரபலங்கள் பலரும், கவுரவமாக கருதினர்.

ஆனால், இணையதளங்களின், 'கிடுகிடு' வளர்ச்சியால், இப்புத்தகத்தின் கவர்ச்சி படங்களுக்கு, கிராக்கி குறைந்து விட்டது. இதன் காரணமாக, 1975ல் 50 லட்சம் பிரதிகள் விற்ற, 'பிளேபாய்' புத்தகம், தற்போது, எட்டு லட்சம் பிரதிகள் மட்டுமே விற்பனையாகிறது. இதனால், '2016லிருந்து, 'பிளேபாய்' அட்டையில் கவர்ச்சி படங்கள் இடம் பெறாது...' என, அதிரடியாக அறிவித்தது பத்திரிகை நிர்வாகம்.

கடைசியாக, சமீபத்தில் வெளியான, 'பிளேபாய்' புத்தகத்தின் அட்டையில், பிரபல ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சனின், கவர்ச்சி படங்கள் இடம் பெற்றன. 'கடைசி பதிப்பிலும், என் கவர்ச்சி படங்கள் இடம் பெற்றதை, கவுரவமாக நினைக்கிறேன். 'பிளேபாயின்' ஆசையை நிறைவேற்றிய மகிழ்ச்சி எனக்கு கிடைத்துள்ளது...' என்கிறார் பமீலா.

— ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us