PUBLISHED ON : ஜன 02, 2011

அ நிறம் | அளவு
* உலகம் என்பது...
தன்னைச் சுற்றி
உள்ளவை என்பதில்
தவறில்லை!
* தன்னைத் தவிர
உலகம் இல்லை
என்பதும்
சரியில்லை!
* கிட்டிய ஒற்றை
நெல்லிக் கனியைக்
கிழவிக்குக் கொடுத்தவன்
வாழ்கிறான்!
* எட்டியதெல்லாம்
தனக்கே என்று
எண்ணும் மனிதன்
தாழ்கிறான்!
*வாடிய முல்லைச்
செடியைக் கண்டு
வாடிய மன்னன்
வாழ்கிறான்!
* தேடிய செல்வம்
தனக்கே என்று
தேடும் மனிதன்
வீழ்கிறான்!
* மண்ணில் நமக்கு
மனித வாழ்க்கை
மறுபடி வருமா
தெரியாது!
* மனிதத் தன்மை
இல்லாதவராய்
வாழ்தல் பெருமை
கிடையாது!
*இருக்கும் சொத்தை
இறைக்க வேண்டாம்;
இரக்கம் என்பது
அது இல்லை!
* ஆண்டவன் அள்ளிக்
கொடுக்கும் வளத்தை
அள்ளிக் கொடுக்கத்
தேவையில்லை!
* அதிலே கொஞ்சம்
அன்பு கொண்டு
கிள்ளிக் கொடுத்தால்
தவறில்லை!
* எத்தனை கொடுத்தோம்
யாருக்குக் கொடுத்தோம்
என்பதை எண்ணி
வருந்தாமல்...
*இருப்பதைக் கொடுத்து
ஏழ்மையைத் துடைக்க
இயன்றதைச் செய்யப்
புறப்படுவோம்!
