தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை - முதுமை

கவிதைச்சோலை - முதுமை

கவிதைச்சோலை - முதுமை


PUBLISHED ON : டிச 26, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 26, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* வருத்தப்படவில்லை மகனே...

உன் சொல்லும், செயலும்

நியாயமானது... சரியானது...

* உலகம் ஆயிரம் சொல்லட்டும்...

உற்றார் உறவினர் எப்படியும்

ஏசட்டும்... கவலைப்படாதே...

* மனக்கசப்புடன் மருமகள்...

ஒட்டாத பேரன், பேத்திகள்

இனியும் உழைக்க

ஒத்துழைக்காத உடம்பு...

* திண்ணையும், புல் தரையும்

காணாமல் அகதியாய்

அடுக்குமாடிக் குடியிருப்பில்

நகரத்து நரக வாழ்க்கை...

* இவை எதுவுமின்றி இப்போது

நலமாய் இருக்கிறேன் மகனே...

உனக்கு நன்றி

சொல்லத்தான் வேண்டும்...

* மழை, வெயில் தெரியாத இருப்பிடம்...

வேளா வேளைக்கு உணவு...

வேலையின்றி அமைதியான ஓய்வு...

நல்லதொரு வயதான நட்பு வட்டம்...

* பொழுது போக

பூஜை... பஜனை...

தாராள மருத்துவம்...

இன்னும் என்ன குறை எனக்கு?

* நீ மட்டும் வாரம் ஒருமுறை

குடும்பத்துடன் வந்து முகம் காட்டு...

உள்ளபடியே நான் மகிழ்வுடன்

இருக்கிறேன் இந்த

முதியோர் இல்லத்தில்!

— சொல்கேளான் ஏ.வி.கிரி, சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us