PUBLISHED ON : மே 06, 2012

வாழ்ந்துதான் பார்ப்போமே!
* நம் வாழ்க்கை
நமக்கே சொந்தம்...
* எத்தனை கோடி
முகம் வைத்தாயோ
அத்தனை கோடி
மன இயல்பையும்
படைத்தாய் இறைவா!
* அன்பும், ஆற்றாமையுமாக
உறவுகள் ஆட்டி படைக்கட்டுமே...
ஏற்றுக் கொள்...
முரண்படாத மனிதன்
இங்கு எவருள்ளான்?
* உடனிருப்போர்
போட்டி, பொறாமையுடன்
பந்தாடட்டுமே...
ஒதுங்கிக் கொள்...
சுவற்றில் அடித்த பந்தாவர்!
* சுயநலமும், பொதுநலமுமாக
சுழன்றடிப்பர் நம் பாதையில்...
வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகள்
நம் வசப்படும்!
* உன் பாதை எது என்று
தீர்மானித்துக் கொண்டாயா?
சஞ்சலமும், சலனமும்
இனி நமக்கில்லை!
* வாழ்க்கை நம்மை
கசக்கினாலும், மிதித்தாலும்
நம் மதிப்பு குறையப் போவதில்லை!
* பிறரை காயப்படுத்துவதை
நிறுத்தினால்
வாழ்க்கைக்கு புது அர்த்தம்
தயமாகும்...
வாழ்க்கையை வாழ்ந்து பார்ப்போம்...
முடிந்தால்
புது சரித்திரம் படைப்போம்!
* நம் வாழ்க்கை
நமக்கே சொந்தம்!
— செல்வி சீனிவாசன், சென்னை.
