தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : மே 20, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 20, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எங்கிருந்து கற்றாய்?

* சொல்

எங்கிருந்து கற்றாய் நீ?

கற்களைத்தானே

எரிந்து சென்றேன்...

எப்படி அதை நீ

கவிதைகளாய்

மாற்றிக் கொண்டாய்?

* கால்களைத்தானே

கட்டி வைத்தேன்...

எப்படி நீ

சிறகுகளை

வளர்த்துக் கொண்டாய்?

* முற்களைத்தானே

நட்டு வைத்தேன்...

எப்படி அதை நீ

புற்களாக்கி

கடந்து சென்றாய்?

* புயல்களைத்தானே

வீசி வைத்தேன்...

எப்படி அதை நீ

தென்றலாய்

திருத்திக் கொண்டாய்?

* பாலைவனத்தில் தானே

விட்டு வந்தேன்...

எப்படி அதை நீ

பனிப்பிரதேசமாய்

படைத்துக் கொண்டாய்?

* சூரியனைத்தானே

விட்டெறிந்தேன்...

எப்படி அதை நீ

குளிர் நிலவாய்

அமைத்துக் கொண்டாய்?

* பூகம்பமாய் தானே

புதைத்துக் கொன்றேன்...

எப்படி நீ

பூச்செடியாய்

முளைத்து நின்றாய்?

* இப்படி என்

எதிர்வினைகளை எல்லாம்

ஏணியாக்கி ஏறி

அந்த வானத்தையே

வளைத்துக் கொண்டாய்...

* சொல்

எங்கிருந்து கற்றாய் நீ?

* எதிர்ப்பு கிளம்பும்போதெல்லாம்

எரிமலையாய் மாறி

எரிக்குமந்த சூட்சமத்தை!

— இளைய சாகுல், முத்துப்பேட்டை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us