தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : மே 27, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 27, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒற்றைக் கயிறு!

* வாழ்க்கை

சிகரத்தை நோக்கிய மலைப்பயணம்

ஏறுவது மட்டுமே உன் வேலை...

ஏறு... ஏறு... ஏறு!

* பயணம் தான் குறிக்கோள்,

சிகரம் அல்ல,

வெற்றி அல்ல...

முயற்சிதானே வாழ்க்கை!

* இன்றைய சோம்பல் நாளைய தேக்கம்

இன்றைய சுகங்கள் நாளை உன் சுமைகள்

நிழலை நோக்கி நகர்ந்து விடாதே...

உயரம், உயரம், உயரம் உன் பயணம்!

* வியர்வை, ரத்தம் இரண்டையும் செலவழி

ஓய்வு, உறக்கம் மருந்துக்கு வைத்துக் கொள்...

உடலெல்லாம் காயப்பட்டாலும்

உன் புன்னகை காய்ந்து விடாமல் பார்த்துக் கொள்!

* கற்களைக் கடக்க கஷ்டப்படாதே...

கைகளால் பிடி, ஏறு

கால்களால் மிதி, மேலே வா...

அடுத்த உயரம் ஆரம்பமாகும்!

* ஏறும்போது தடையாய் வந்த கற்கள்

நீ தவறி விழும்போது

உன்னைத்

தாங்கிப் பிடிக்கும்!

* சில அடி ஏறி

பல அடி சறுக்கலாம்...

கூட்டிக் கழித்துப் பார்

உன் உயரம் வரை நிச்சயம் லாபம்!

* ஏறுவது மட்டுமே உன் வேலை

ஏறு... ஏறு... ஏறு!

விழுவதிலும் தவறில்லை

விழு... விழு... விழு...

விழுந்து கொண்டே இரு...

ஆனால், விட்டுவிடாதே...

உச்சியை உன்னோடு இணைக்கும்

ஒற்றைக் கயிற்றை!

எல்.எஸ்.கண்ணன், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us