தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : ஜூன் 03, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 03, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேர் தட்டிலே ஒரு தேவ கீதம்!

* வாழ்க்கை

குருஷேத்திரத்தில்

வாடும் நமக்கு,

கீதை உரைக்கும்

பார்த்தசாரதி

அனுபவம்!

* அஸ்திரம் எடுப்பதா,

அமைதி காப்பதா?

குழம்பும் மனதை

அதுதானே

ஆற்றுப்படுத்துகிறது!

* வார்த்தை உபாயமும்

வாதில் சகாயமும்

வழங்கும்

கிருஷ்ண வடிவம்

அனுபவம்!

* அது,

பொங்கி எழுவதை விட

பொறுமை காப்பதே

புத்திசாலித்தனம் என்கிறது!

* காண்டீபம்

கைநழுவினாலும்

கவலைப்படாதே

என

கனிவாய் சொல்கிறது!

* அனுபவம்

ஒருபோதும்

போரை விரும்புவதில்லை...

பொறுத்துப் போதலே

பொருத்தமானது என்கிறது!

* போரிடாமலே

வெற்றி எய்தலாம்...

காத்திருப்பு மட்டுமே

கவசமாய் இருந்தால்-

இது

அனுபவம் சொல்லும் கீதை!

* நம்மில் பலர்,

அனுபவ சாரதியை

அலட்சியம் செய்வதால்

ரணகளப்படுகிறது

வாழ்க்கை!

* சிக்கல் எழுகையில்

அறிவு தேரில் அமர்ந்து

வரும் அனுபவத்தை

அடைக்கலம் புகுந்தால்,

ஆபத்தில்லாமல்

ஆதாயம் பெறலாம்!

சு.விஜயலட்சுமி, கடம்பூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us